பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே விற்பனை திருவிழாவில், அக்டோபர் 16 முதல் அக்டோபர் 21 வரை பல சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்கியது.
கொரோனா காரணமாக பொருளாதாரம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக தேவை முடங்கியுள்ளது என பலவாறு அறிக்கைகள் வெளியாகி வந்தது.
ஆனால் இந்த ஆறு நாட்கள் நடந்த இந்த விழாக்கால விற்பனை திருவிழாவில், விற்பனை படுஜோராக இருந்ததாக ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் கூறி வருகின்றன.
மூன்று மடங்கு விற்பனை
இந்த விழாக்கால விற்பனை சலுகையில், விற்பனையாளர்களின் எண்ணிக்கையில் 1.5 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. அவர்களில் 35% அதிகமானோர் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு விற்பனை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நிறுவனம் அதன் தளத்தில் 35% புதிய விற்பனையாளர்களை சேர்ந்திருப்பதாக கூறியிருந்தது. இதில் 60% டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்டுக்கு வருகை
பிளிப்கார்டின் இந்த பிக் பில்லியன் டே விற்பனையில் 666 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகைகளைக் கண்டது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அடுக்கு 3 நகரங்களைக் சேர்ந்தவர்கள், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, இது அதிகம் என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இது தேவை மீண்டு வருவதையும், நுகர்வு அதிகரித்து வருவதையும் காண முடிகிறது.
டிஜிட்டல் பேமென்ட்ஸ் அதிகரிப்பு
இந்த விழாக்கால விற்பனையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்த ஆண்டு 55% அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய டிஜிட்டல் வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பல்வேறு டிஜிட்டல் மற்றும் வாலட் தலைமையிலான சலுகைகளையும் பெற்றதாகவும் பிளிப்கார்ட் தரவுகள் கூறுகின்றது. இதனால் பரிவர்த்தனை விகிதம் வெகுவாக அதிகரித்துள்ளது.
பே லேட்டர் ஆப்சன்
இதே பொருட்களை வாங்கி விட்டு பிறகு பிறகு பணம் செலுத்தும் நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்சனும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 150% அதிகரித்துள்ளது. பே லேட்டர் என்ற ஆப்சனை பயன்படுத்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முன்பை விட 7 மடங்கு அதிகமாக செலவிட்டுள்ளனர்.
இஎம்ஐ வசதி
இஎம்ஐ வசதியை பயன்படுத்தியவர்கள் கடந்த 2019வுடன் ஒப்பிடும்போது 170% அதிகரித்துள்ளது. ஆக இது தேவை மீண்டு வருவதயே சுட்டிக் காட்டுகிறது. இது பொருளாதாரம் மீண்டு வருவதற்கான பச்சை துளிர்களை காட்டியுள்ளது. அதெல்லாம் சரி இவ்வாறு, பரிவர்த்தனை செய்யப்பட்ட வகைகளில் மொபைல்கள் அதிகமாக உள்ளன.
மொபைல் விற்பனை தான் அதிகம்
இதில் மொபைல் எக்சேன்ஜ் சலுகைகள் கடந்த ஆண்டை காட்டிலும் 30% அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கி சலுகைகள் எடுத்துக் கொண்டது 46% அதிகரித்துள்ளது. பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவு 3.2 மடங்கு அதிகரித்துள்ளது. இது முக்கியமாக ஆப்பிள், கூகிள் மற்றும் சாமசங் தொலைபேசிகளைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications