இந்தியர்களுக்கு செம நியூஸ்..பிளிப்கார்டில் 70,000 பேருக்கு காத்திருக்கும் வாய்ப்பு.. நல்ல சான்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே சென்றாலும், வரவிருக்கும் பண்டிகை தினங்களில் தேவை மீட்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பல துறைகளிலும் நிலவி வருகின்றது.

இதனால் ஒவ்வொரு துறையினரும் சுறுசுறுப்பாக பண்டிகை நாட்களையொட்டி, தங்களது வியாபாரத்தினை மேம்படுத்தி வருகின்றனர்.

அதிலும் இந்தியாவினை பொறுத்தவரையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் அடுத்தடுத்த மாதங்களில் தொடங்க விருப்பதால், ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அதற்கேற்றவாறு தயாராகி வருகின்றன.

70 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு

70 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு

அந்த வகையில் வால்மார்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் நிறுவனம் வர விருக்கும் பிக் பில்லியன் டேவிற்காக தயாராகி வருகின்றது எனலாம். சற்று முன்னதாக அமேசான் நடப்பு ஆண்டில் மீண்டும் 1 லட்சம் பேரை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்து இருந்தது. எனினும் அது அமெரிக்கா கனடாவில் தான். ஆனால் மற்றொரு ஆன்லைன் ஜாம்பவான் ஆன பிளிப்கார்ட் நிறுவனம் அதன் பிக் பில்லியன் டேவினால், 70,000 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

பல ஆயிரம் பேர் பயன்

பல ஆயிரம் பேர் பயன்

இந்த 70 ஆயிரம் வாய்ப்புகளானது நேரடியாகவும், மறைமுகமாகவும் இருக்கும் எனவும் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெங்களூருவினை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் விநியோக சங்கிலியின் காரணமாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் பேர் பயனடைவர் என்றும் தெரிவித்துள்ளது.

மறைமுக வாய்ப்புகள்

மறைமுக வாய்ப்புகள்

அதோடு பிளிப்கார்டின் விநியோக சங்கிலியால் நேரடியாக பல ஆயிரம் பேர் பயனடைவர். குறிப்பாக டெலிவரி எக்ஸ்கியூடிவ்ஸ், பேக்கேஜிங், உள்ளிட்ட துறையில் பல வாய்ப்புகள் உள்ளது. அதே வேளையில் பிளிப்கார்டின் விற்பனையாளர், கூட்டாளர்கள், கூட்டாளர் இருப்பிடங்களில் வேலை மற்றும் கிரானாக்களில் வேலைகள் உருவாக்கப்படும் என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அதோடு உற்பத்தியாளர் தரப்பிலும் வேலைகள் அதிகரிக்கும். ஆக பிளிப்கார்டின் விரிவாக்கம் மற்றும் விற்பனை அதிகரிப்பானது இன்னும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். இதற்கிடையில் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனை களைகட்டும் என்று எதிர்பார்க்கின்றன. அப்போது ஆர்டர்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றன.

 கூடுதல் வேலை வாய்ப்புகள்

கூடுதல் வேலை வாய்ப்புகள்

கடந்த ஆண்டிலேயே இந்த விழாக்கால விற்பனையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் 1.4 லட்சம் தற்காலிக வேலை வாய்ப்பினை உருவாக்கின. இந்த நிலையில் இந்த பிக் பில்லியன் டே விற்பனையில் அதிக முதலீடுகள் தேவை. இது கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். குறிப்பாக பேக்கேஜிங், டெலிவரி உள்ளிட்ட துறைகளில் இந்த தேவை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart’s big billion day may create 70,000 jobs in this festival season

Flipkart’s Big billion days may create thousands of job offers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X