ஷாப்பிங் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? குழந்தைகளின் விளையாட்டு பொம்மை தொடங்கி, பெரியோர் விரும்பி அணியும் தங்கம் வரையில் பார்த்து பார்த்து வாங்குவது என்பது பலருக்கும் பிடித்தமான விஷயம் எனலாம். தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது அதிகரித்துள்ளது. இது இன்னும் வாடிக்கையாளர்களுக்கு பல பொருட்களை ஒப்பிட்டு பார்த்து வாங்க செளகரியமாக போய்விட்டது எனலாம்.
குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு ஆன்லைன் ஷாப்பிங் மீதான மோகம் கணிசமாக அதிகரித்துள்ளது எனலாம்.
ஆரம்ப காலகட்டங்களில் நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே ஆன்லைன் ஷாப்பிங் அதிகளவில் இருந்து வந்தது. ஆனால் இன்றோ அப்படியில்லை. பட்டிதொட்டியெல்லாம் பரவி விட்டது.
ஆன்லைன் ஷாப்பிங் ஆர்வம்
நாய்க்கு பயன்படுத்தும் உணவு தொடங்கி வெடி பொருட்கள் வரையில் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் மின்னணு சாதனங்கள் அதிகளவில் தேடப்படுவதும், வாங்கப்படுவதும் அறிந்த ஒரு விஷயமாகும். இதற்காக ஓரு தனி ரசிகர் பட்டாளமே ஆன்லைன் நிறுவனங்களுக்கு உண்டு. ஆன்லைன் விற்பனையில் அளிக்கப்படும் தள்ளுபடிகள், சலுகைகள், கேஷ் பேக் ஆஃபர்கள், ஜீரோ காஸ்ட் இ எம் ஐ என பலவும் இளைஞர்களை கவரும் விதமாக வருகின்றன.
விலை அதிகமா?
இப்படி ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது அனைவரும் பணம் செலுத்தி விட்டு பின்னர் பொருளை பெறுவதில்லை. பலரும் கேஷ் ஆன் டெலிவரி (COD) என்ற ஆப்சனையும் விரும்புகின்றனர். இந்த கேஷ் ஆன் டெலிவரி ஆப்சனை ஒரு பயனர் பயன்படுத்துகிறார் எனில், அவருக்கும் விலை சற்று அதிகம் என்று கூறப்படுகின்றது. இது உண்மையா? வாருங்கள் பார்க்கலாம்.
ஷிப்பிங் கட்டணம்
பிளிப்கார்டில் பொருட்களை வாங்கும்போது கேஷ் ஆன் டெலிவரி ஆப்சன் என்பதை கொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு நாமினல் கட்டணம் என 5 ரூபாய் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆக இது உங்களை கூடுதலாக கட்டணம் செலுத்த வழிவகுக்கலாம்.
அது தவிர ஷிப்பிங் கட்டணம் என சில பொருட்களுக்கு கட்டணம் விதிக்கப்படுகின்றது. இது பொருட்களின் விலையை பொறுத்து இருக்கலாம்.
எவ்வளவு கட்டணம்
நீங்கள் வாங்கும் பொருள் 500 ரூபாய்க்கு கீழாக இருந்தால் அதற்கான கட்டணமாக 40 ரூபாய் விதிக்கப்படலாம். 500 ரூபாய்க்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு ஷிப்பிங் கட்டணம் கிடையாது.
எனினும் இந்த கட்டணம் இல்லாமல் பொருட்களை வாங்க வேண்டுமெனில், பிளிப்கார்ட் பிளஸ் சந்தாதாரர்களாக நீங்கள் மாறிக் கொள்ளலாம். அப்படி மாறும் பட்சத்தில் உங்களுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படுவதில்லை.
கட்டாயம் ரூ.5 கட்டணம்
எந்த வாடிக்கையாளராக இருந்தாலும் கேஷ் ஆன் டெலிவரி ஆப்சனை தேர்ந்தெடுக்கும்போது, கட்டாயம் 5 ரூபாய் கட்டணம் என்பது விதிக்கப்படுகின்றது.
இ-காமர்ஸ் நிறுவனங்கள் பணத்தை கையாள்வதை குறைக்க, ஆன்லைன் பரிமாற்றங்களையே ஊக்குவித்து வருகின்றன. இதனை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பல சலுகைகளையும் அறிவிக்கின்றன.
ஏன் இந்த நடவடிக்கை
ஆக மேற்கண்ட கட்டணத்தை தவிர்க்க வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனையை செய்யலாம். கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்யும் பொருட்கள் பல்வேறு காரணிகளினால் டெலிவரி செய்ய முடியாமல் போகின்றன. சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று மொத்த ஆர்டர்களில் மூன்றில் ஒரு பங்கு டெலிவரி செய்ய முடியாமல் போவதாக கூறுகின்றது. இதன் பாதிப்பு நிறுவனங்களுக்கே என்பதால், இ-காமர்ஸ் நிறுவனங்கள் இத்தகைய நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.
விலை அதிகமா?
பொதுவாக கிரெடிட் கார்டு மூலமாக வாங்கும்போதும், டெபிட் கார்டு மூலமாக பொருட்களை வாங்கும்போது சில ஆஃபர்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் கேஷ் ஆன் டெலிவரி என்ற ஆப்சனில் இந்த கட்டணம் கிடையாது. இதனால் உங்களுக்கு விலை அதிகமாக தோன்றலாம். சில நேரங்களில் கிரெடிட் கார்டு மூலம் வாங்கும்போதும் கேஷ் பேக் சலுகையும் கிடைக்கும். ஆனால் இது எதுவும் கேஷ் ஆன் டெலிவரியில் கிடைப்பதில்லை. இதுவே விலையில் சற்று வித்தியாசத்தினை ஏற்படுத்தலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications