இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாகத் திகழும் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஜியோ மார்ட் உடன் போட்டிப்போடக் கடுமையாகப் போட்டிப்போட்டு வருகிறது.
சந்தையில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் எனவும், புதிதாக வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் எனப் பல புதிய பிரிவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வருகிறது.
இந்த நேரத்தில் அமலாக்க துறையின் ஷோகாஸ் நோட்டீஸ் இந்நிறுவன வளர்ச்சிக்குத் தடையாகவும், முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய பிரச்சனையாகவும் வெடித்துள்ளது.
அமலாக்க துறை
அமலாக்க துறை பல வருடங்களாகப் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் தங்கள் இந்திய வர்த்தகத்திற்குச் செய்து வரும் அன்னிய முதலீடுகள் கூர்ந்து கவனித்து வருகிறது.
மல்டி பிராண்ட் ரீடைல்
இந்தியாவில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மல்டி பிராண்ட் ரீடைல் மற்றும் விற்பனையாளர்கள் நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் வாயிலாகப் பல முறைகேடுகள், விதிமீறல்கள் செய்துள்ளதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.
WS Retail நிறுவனம்
தற்போது பிளிப்கார்ட் ஈர்த்து வரும் அன்னிய முதலீட்டில் விதிமீறல்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதன் கூட்டணி விற்பனை நிறுவனமான WS Retail நிறுவனம் ஈகாமர்ஸ் தளத்தில் செய்து வரும் வர்த்தகம் இந்திய வர்த்தகச் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டது என்றும் அமலாக்க துறை குற்றம்சாட்டியுள்ளது எனச் சில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1.35 பில்லியன் டாலர் அபராதம்
இந்த விதிமீறல்களுக்காக அமலாக்கத் துறை சுமார் 1.35 பில்லியன் டாலர் அளவிலான அபராதம் விதித்தது. இதைச் செலுத்தத் தவறிய காரணத்தால் தற்போது அமலாக்க துறை பிளிப்கார்ட் நிறுவனத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஷோகாஸ் அதாவது நேரில் வந்து ஏன் அபராதத்தை விதிக்கக் கூடாது என்பதை விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனம்
அமலாக்கத் துறையின் சென்னை அலுவலகம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால், தற்போது நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் முதலீட்டாளரான டைகர் குளோபல் ஆகியோரை 10,000 கோடி ரூபாய் அதாவது 1.35 பில்லியன் டாலர் அளவிலான அபராதம் குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிளிப்கார்ட் செய்தி தொடர்பாளர்
இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்திய அரசின் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் கீழ் தான் வர்த்தகம் செய்யப்படுகிறது. எவ்விதமான விதிமீறல்களையும் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
2009 முதல் 2015 வரையிலான வர்த்தகம்
மேலும் அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸ் படி 2009 முதல் 2015 வரையிலான வர்த்தகம் குறித்த விளக்கம் கோரப்பட்டு உள்ளது. இதற்கான விளக்கத்தைக் கட்டாயம் முழுமையாக அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
WS Retail நிறுவனம் மூடல்
தற்போது அமலாக்க துறை முக்கியப் பிரச்சனையாகப் பார்க்கும் WS Retail நிறுவனம் மற்றும் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 2015லேயே முழுமையாக மூடப்பட்டது. மேலும் அமலாக்கத் துறையின் நோட்டீஸ்-க்கு 90 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
சச்சின் பன்சால், பின்னி பன்சால்
2018ல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை அமெரிக்காவின் முன்னணி ரீடைல் நிறுவனமான வால்மார்ட் கைப்பற்றியது. இதன் பின்பு பிளிப்கார்ட் நிறுவனத் தலைவரான சச்சின் பன்சால் பிளிப்கார்ட் பங்குகளை முழுமையாக விற்பனை செய்து வெளியேறினார். இதன் பின் பின்னி பன்சால் சிறு பங்கு இருப்புடன் உள்ளார்.
16 பில்லியன் டாலர் மதிப்பீடு
ஜூலை மாதம் பிளிப்கார்ட் நிறுவனம் ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் இருந்து பெற்ற முதலீடு இந்நிறுவனம் 16 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்று உள்ளது.
வால்மார்ட் - டைகர் குளோபல்
அமெரிக்காவின் வால்மார்ட் தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்நிறுவனத்தில் முதலீடு செய்த டைகர் குளோபல் தான் தினசரி வர்த்தகம் நிர்வாகப் பணிகளைச் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications