பிளிப்கார்டு எடுத்த அதிரடி நடவடிக்கை.. விற்பனை படு வீழ்ச்சி தான் காரணமா.. ஜாபங்கிற்கு என்ன ஆச்சு!

டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வரும் அதே வேளையில் தான், கெடுபிடிகளும் அதிகரித்து வருகின்றன. இதுவே ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு பெருத்த அடியாக இருந்து வருகிறது.

மேலும் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக், நுகர்வோர் விற்பனையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சந்தை, அவ்வளவாக பேஷன் துறையில் கைகொடுக்க வில்லை என்றே கூறலாம்.

ஏதேனும் பண்டிகை காலாமா? பிளிப்கார்டில் என்ன ஆஃபர், அமேசானில் என்ன சலுகை என்று பார்த்து பார்த்து வாங்கும் நம்மவர்கள், ஆன்லைனில் ஆடைகளை வாங்குவதில் அவ்வளவாக விரும்புவதில்லை என்றே கூறலாம்.

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த திட்டம்

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த திட்டம்

அதிலும் தற்போது இந்தியாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், ஏற்கனவே சில்லறை வர்த்தகம் சற்று முடங்கியுள்ள நிலையில், ஆன்லைன் பேஷன் விற்பனை வெகுவாக குறைந்து விட்டது என்றே கூறலாம். இந்த நிலையில் தான் பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனமான மிந்த்ரா, ஜாபங் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் தனது ஆதிக்கத்தினை செலுத்த முயன்று வந்தது.

ஜபாங் பயன்பாடு வீழ்ச்சி

ஜபாங் பயன்பாடு வீழ்ச்சி

மேலும் பல மாதங்களாகவே பிரபல ஆன்லைன் பேஷன் நிறுவனமான ஜபாங் பெரும் வர்த்தக சரிவை கண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையிலேயே பலமான போட்டிகளுக்கு மத்தியில் பிளிப்கார்ட் ஜபாங் நிறுவனத்தினை 70 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. இந்த நிலையில் இந்த பிராண்டிற்கான பதிவிறக்கப் பயன்பாடுகளில் 13% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

வாடிக்கையாளர்களை மிந்த்ராவுக்கு திருப்பிவிடும் ஜபாங்

வாடிக்கையாளர்களை மிந்த்ராவுக்கு திருப்பிவிடும் ஜபாங்

இதனால் ஜபாங் தற்போது தனது சந்தையினை குறைத்து வருவதாகவும், தனது தளத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை மிந்த்ராவிற்கு திருப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் ஜபாங் தளத்தில் சென்று க்ளிக் செய்தால் அது மிந்த்ரா தளத்திற்கு தான் செல்கிறது. கடந்த ஜூலை 2019ல் இருந்தே பிளிப்கார்டு ஜபாங்கில் அதன் சந்தைபடுத்துதல் செலவினங்களை குறைக்கத் தொடங்கியதாக கூறப்பட்டது. மேலும் அதிகப்படியான தள்ளுபடிகளை வழங்குவதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களை மிந்த்ராவுக்கு திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இணைப்பு நடவடிக்கை

இணைப்பு நடவடிக்கை

இந்த நிலையில் சில அறிக்கைகளை பார்க்கும் போது, மிந்த்ராவின் பயன்பாட்டு பதிவிறக்கங்களில் 41.18% அதிகரித்துள்ளதாகவும், அதன் தினசரி செயல்பாடுகள் தினசரி 31.87% உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிளிப்கார்ட் நிறுவனம் 2014ல் பேஷன் தளமான மிந்தராவை வாங்கியது. இந்த நிலையில் நவம்பர் 2018ல் வால்மார்ட் கையகப்படுத்தப்பட்ட உடனேயே பிளிப்கார்ட் மிந்த்ரா மற்றும் ஜபாங் இரண்டையும் இணைத்தது. இது அந்த சமயத்தில் 150 பணியாளர்களையும் பணி நீக்கம் செய்யவும் வழி வகுத்தது.

வலுபடுத்தலாக கூட இருக்கலாம்

வலுபடுத்தலாக கூட இருக்கலாம்

இந்த நிலையில் இத்துறை சார்ந்த நிபுணர்கள் செலவினைக் குறைக்கவும், மிந்த்ரா செயல்பாட்டினை ஊக்குவிக்கவும் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏன் மிந்த்ராவை வலுப்படுத்தக் கூட இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கலாமே. எப்படியோங்க இதுவும் பிளிப்காட்டுக்கு சொந்தமான தளம் தானே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+