இந்தியாவில் யுபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இண்டர்ஃபேஸ் செயலிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சேவையை பயன்படுத்துவது எளிமையாக இருப்பதால் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் யுபிஐ செயலிகளின் ஆதிக்கம் வந்துவிட்டது.
ஏற்கனவே இந்திய சந்தையில் கூகுள் பே, போன்பே, பேடிஎம், அமேசான் பே ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அதற்கு போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமும் யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.

பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தனது சொந்த யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி பிளிப்கார்ட் யுபிஐ என அழைக்கப்படுகிறது. பொதுவாக ஈ – காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பேமெண்ட் வசதியை வழங்க யுபிஐ செயலிகளை ஒரு வழியாக பயன்படுத்துகின்றன.
பெரும்பாலும் இதற்கு மூன்றாம் தரப்பு முகமைகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க ஏற்கனவே அமேசான் நிறுவனம் அமேசான் பே -ஐ பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது போல், தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் அதே பாணியை பின்பற்றியுள்ளது.
வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் பிளிப்கார்ட் யுபிஐ செயலியை பயன்படுத்தலாம் என்றும் இது பயன்படுத்துவது மிக எளிதானது என்றும் பிளிப்கார்ட்டின் ஃபின்டெக் மற்றும் பேமெண்ட்ஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் தீரஜ் அனேஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் பிளிப்கார்ட்டின் துணை நிறுவனமான போன்பே பெரும் UPI சேவையில் பெரும் ஆதிக்கத்தை கொண்டிருக்கும் வேளையில், பிளிப்கார்ட் யூபிஐ அறிமுகமாகியுள்ளது. போன்பே தனி நிறுவனமாக இயங்கி வருகிறது, இது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நேரடியாக வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நிறுவனமாக உள்ளது.
ஏற்கனவே பிளிப்கார்ட்டில் கிடைக்கும் சூப்பர்காயின்கள், பிராண்ட் வவுச்சர்கள் மற்றும் பிற வெகுமதிகளை, பாதுகாப்பான மற்றும் வசதியான கட்டண விருப்பங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அனேஜா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிளிப்கார்ட் செயலியின் உள்ளேயும் வெளியேயும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கட்டணங்களுக்கான பிளிப்கார்ட் யுபிஐ வசதி முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் முதலில் பிளிப்கார்ட் செயலியில் யுபிஐ ஐடியை உருவாக்க வேண்டும், அதன் பிறகு அவர்கள் வணிகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு பணம் செலுத்தலாம். வேறு எந்த செயலிக்கும் செல்லாமல் நேரடியாக பில்களை செலுத்தலாம்.
மிந்த்ரா, பிளிப்கார்ட் ஹோல்சேல், பிளிப்கார்ட் ஹெல்த்+ மற்றும் க்ளியர்டிரிப் உள்ளிட்ட பிளிப்கார்ட் குழுமம் நிறுவனங்களில் இந்த யுபிஐ வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த புதிய வசதி மூலம், பிளிப்கார்ட் நிறுவனமும் வாடிக்கையாளர்களும் அமேசான் பே, கூகுள் பே, பேடிஎம் மற்றும் போன்பே போன்ற மூன்றாம் தரப்பு யுபிஐ பயன்பாடுகளை நம்பி இருக்க வேண்டிய தேவை இருக்காது.
பிளிப்கார்ட் நிறுவனத்தை பொறுத்தவரை 50 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்கள் மற்றும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி பிப்ரவரி மாதத்தில், மொத்தம் 18.3 கோடி ரூபாய் மதிப்புள்ள 1210 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் பிளிப்கார்ட் செயலி வழியே செய்யப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 61% அதிகம். எனவே இந்த புதிய வசதி பிளிப்கார்ட்டிற்கு லாபம் அளிக்கும் என்றே கருதப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications