இந்தியாவில் அனைத்து துறையிலும் டிஜிட்டல் சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், விவசாயத் துறையிலும் அதிகரித்து வருகிறது. காய்கறி மற்றும் பழம் டெலிவரி சேவையில் இருந்து, தோட்டத்தில் இருந்து நேரடி ஹோம் டெலிவரி வரையில் பல சேவைகள் வந்துள்ளது. இத்துறையில் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் பன்னாட்டு நிறுவனங்களும் இத்துறையில் இறங்க முடிவு செய்து இதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
விவசாயிகளிடம் நேரடியாக விளைபொருட்களை வங்கி மக்களுக்கு டெலிவரி ஆன்லைன் ஆர்டர் பெயரில் டெலிவரி செய்யும் நின்ஜாகார்ட் நிறுவனத்தில் பிளிப்கார்ட் மற்றும் அதன் தாய் நிறுவனமான வால்மார்ட் போட்டிப்போட்டுத் தனித்தனியாக முதலீடு செய்துள்ளது.
இந்திய ஆக்ரி ஸ்பேஸ்
இந்திய ஆக்ரி ஸ்பேஸ் பிரிவு வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஆன்லைன் பார்மா துறையை விடவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தக நிறுவனங்கள் இத்துறையில் இறங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாகப் பிளிப்கார்ட் தற்போது முக்கியமான முதலீட்டைச் செய்துள்ளது.
நின்ஜாகார்ட்
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நின்ஜாகார்ட் நிறுவனத்தில் பிளிப்காட்ர் மற்றும் வால்மார்ட் தனித்தனியாகச் சுமார் 145 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளது. இது இந்தியாவின் அக்ரிடெக் துறையில் இது மிகப்பெரிய முதலீடாக உள்ளது.
பிளிப்கார்ட்
நின்ஜாகார்ட் நிறுவனத்தில் பிளிப்கார்ட் 3வது முறையாக முதலீடு செய்துள்ளது, 2019 வெளியிடப்படாத தொகை, 2020ல் 30 மில்லியன் டாலர், தற்போது வால்மார்ட் உடன் இணைந்து சுமார் 145 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் பிளிப்கார்ட் மளிகை பொருட்கள் விற்பனையைத் தாண்டி விளை பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும்.
800 மில்லியன் டாலர் மதிப்பீடு
இந்த முதலீட்டின் மூலம் நின்ஜாகார்ட் நிறுவனத்தின் மதிப்பு 750 முதல் 800 மில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் நின்ஜாகார்ட் முதலீட்டின் மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை வர்த்தகமான பிளிப்கார்ட் குவிக் பிரிவின் 90 நிமிட டெலிவரி சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது பிளிப்கார்ட் நிர்வாகம்.
பிளிப்கார்ட் குவிக் சேவை
மேலும் பிளிப்கார்ட் குவிக் சேவையை 2022ஆம் ஆண்டுக்குள் 200 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு உள்ளது. இத்துறையில் ஏற்கனவே ரிலையன்ஸ், அமேசான், பிக் பேஸ்கட் ஆகிய நிறுவனங்கள் இருக்கும் நிலையில் பிளிப்கார்ட் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்த உள்ளது.


Click it and Unblock the Notifications