பெங்களூரில் கடுமையாக மழை பெய்ததன் காரணமாக அங்குள்ள பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது. யெலகங்கா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. மறைந்த APJ அப்துல் கலாம் அவர்களின் இல்லமாக இருந்த இந்த பகுதியில் திங்கட்கிழமை இரவு பெய்த கன மழையால் நகரின் பல பகுதிகள் நீரில் நிரம்பி உள்ளன. ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாக இந்த பகுதியில் உள்ள மக்கள் கடுமையான வெள்ளத்தை எதிர்கொள்கின்றனர்.
யெலஹங்காவில் உள்ள கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், பெல்லாரி சாலைக்கு அருகாமையில் மற்றும் பெங்களூரு விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் இடுப்பளவு தண்ணீர் இருந்ததால் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

கடந்த வாரம் முதலே பெங்களூரின் டிரைனேஜ் வசதி குறித்து பலரும் தங்களுடைய அதிருப்தியை தெரிவிக்கும் நிலையில், யெலஹங்கா பகுதியில் உள்ள கார்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
அங்குள்ள அப்பார்ட்மெண்டுகளில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியில் கொண்டுவர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பெங்களூரில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததாகவும், நான்கு விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தாய்லாந்தில் இருந்து வந்த தாய் லயன் ஏர் விமானமும் சென்னைக்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யெலஹங்கா மற்றும் வடக்கு பெங்களூருவின் பிற பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன.
பெலந்துறை போக்குவரத்து போலீசார் கூறுகையில், "எக்கோஸ்பேஸ் சந்திப்பில் உள்ள வெளிவட்ட சாலையில், தேவரபீசனஹள்ளி முதல் பெல்லந்தூர் சந்திப்பு வரை தண்ணீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து மெதுவாக உள்ளகாகத் தெரிவித்தார்". இதன் காரணாமாக திங்கள்கிழமை பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மூடப்பட்டன, மேலும் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
சென்ற வாரம் பெய்த கனமழையால் இந்தியாவின் மிகப்பெரிய அலுவலக வளாகங்களில் ஒன்றான மன்யாதா டெக் பார்க், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. 300 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த டெக் பார்க் நீரில் மூழ்கியது. சமூக ஊடகங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெக் பார்க்கின் வீடியோக்கள் பரவலாக பகிரப்பட்டன.


Click it and Unblock the Notifications