ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றனர். இரு மாநிலங்களிலும் தலா 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சுமார் 4 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் சில நாட்களுக்கு வெள்ள நீரை எதிர்த்து தாக்குப் பிடிக்கும் என்றாலும், நீடித்த வெள்ளம் பருத்தி, செம்பருத்தி மற்றும் சில பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இது இந்த மாநில விவசாயிகளின் நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இவ்விரு மாநிலங்களிலும் விவசாயிகள் காரீஃப் அறுவடையை எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கு தற்போது ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.

"வெள்ளத்தால் 20 மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து மாவட்டங்களில் 1.69 லட்சம் ஹெக்டேர் பயிர்களும், 19,000 ஹெக்டேரில் காய்கறிகள், பழங்கள் போன்ற பயிர்களும் சேதமடைந்துள்ளன" என்று ஆந்திரப் பிரதேசத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சுமார் 2 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெலுங்கானா அரசு மதிப்பிட்டுள்ளது. பருத்தி மற்றும் செம்பருத்தியில் ஏற்பட்ட சேதம் சற்று அதிகமாக உள்ளது என்று ஒரு உயர் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வேளாண் துறையினர் மழையினால் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வேளாண் துறை நிலைமையை கண்காணித்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த வெள்ள பாதிப்பால் பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும். இதன் விளைவாக, சந்தையில் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக, பருத்தி உற்பத்தி குறைவால் துணி விலை உயரும். அரசு, உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மறுபுறம், தெலுங்கானா விவசாயிகள் சங்கம், உணவுப் பயிர்களில் ஏற்பட்ட இழப்புக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடும், வணிகப் பயிர்களுக்கு ரூ.50,000 இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. "முதல்வர் ரேவந்த் ரெட்டி ஒரு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு அறிவித்தார். இழப்புகளை கருத்தில் கொண்டு அரசு இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ராம்பாபு கூறியுள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு உதவ முன்வருவோர் கீழ்க்காணும் வங்கி கணக்கிற்கு நிதியுதவி செய்யலாம்.
State Bank Of India:
A/c Name : CMRF
A/c Number : 38588079208
Branch: AP Secretariat
IFSC code : SBIN0018884
Union Bank of India:
A/c name : CM Relief Fund
A/c number : 110310100029039
Branch: AP Secretariat, Velagapudi.
IFSC code : UBIN0830798.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications