தொலைத் தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பின்னர், மற்ற நிறுவனங்களும் பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. அப்படி வாரி வழங்கிய சலுகைகள் ஹிட் ஆன திட்டங்கள் என்னென்ன? பிளாப் ஆன திட்டங்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.
அதிலும் குறிப்பாக டேட்டா திட்டங்களில் அனைத்து நிறுவனங்களும் சலுகைகளை வாரி வழங்கினாலும், ஜியோவினை அடித்துக் கொள்ள எந்த திட்டமும் இல்லை என்றே கூறலாம்.
சரி வாருங்கள் ஒவ்வொரு நிறுவனமும் எந்த மாதிரியான திட்டங்களைக் கொண்டுள்ளன, அவற்றில் எது ஹிட் & பிளாப் என்று.
Array
598 ரூபாய் மதிப்பிலான ஜியோவின் திட்டத்தில் வேலிடிட்டி 56 நாட்களாகும். இந்த திட்டத்தில் 112 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதோடு ஸ்டீரிமிங் சலுகையும் வழங்கப்பட்டது. இது ஜியோவின் 599 ரூபாய் திட்டத்துடன் ஒப்பிடும்போது சலுகைகள் குறைவு தான். ஏனெனில் இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி உண்டு. இந்த திட்டத்தில் 168 ஜிபி டேட்டா சலுகையும் உண்டு.
Array
ஏர்டெல் நிறுவனம் வழங்கி வரும் பிரிபெய்டு திட்டங்களில் 289 ரூபாய் திட்டத்தில், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவையும், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். இதே ஏர்டெல்லின் மற்றொரு திட்டமான 279 ரூபாய் திட்டத்திலும் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்கும், தினசரி 1.5ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இது 289 ரூபாயுடன் ஒப்பிடும்போது சற்று குறைவு தான்.
ஏர்டெல்லின் பிளாப் பிளான்
ஏர்டெல்லின் மற்றொரு திட்டமான 349 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதோடு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வேலிடிட்டி 28 நாட்களாகும். இதைவிட குறைந்த விலையில் இதே சலுகைகளுடன், ஏர்டெல்லின் மற்றொரு திட்டமான 298 ரூபாய் திட்டம் உள்ளது. இந்த திட்டத்திலும் 2ஜிபி டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்படுகிறது.
ஏர்டெல்லின் ரூ.448 திட்டம் Vs ரூ.398 திட்டம்
ஏர்டெல்லின் ரூ.448 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டது. இதில் தினசரி 3ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்-கள் ஒரு நாளைக்கு வழங்கப்படுகிறது. இதோடு அன்லிமிடெட் கால் சேவையும் வழங்கப்படுகிறது. எனினும் இது ஏர்டெல்லின் 398 ரூபாய் திட்டத்துடன் ஒப்பிடும்போது தினசரி 3 ஜிபி டேட்டாவும், வேலிடிட்டி 28 நாட்களாகவும் உள்ளது.
ஏர்டெல்லின் ரூ.2,698 திட்டம் Vs ரூ.2,498 திட்டம்
ஏர்டெல்லின் ரூ.2,698 திட்டம் ஒரு வருடம் வேலிடிட்டியை கொண்டது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதி உண்டு. இந்த திட்டத்துடன் ஒப்பிடும்போது 2,498 ரூபாய்க்கான திட்டத்தில், 365 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டது. இதில் தினசரி 2 ஜிபி டேட்டாவினையும் வழங்குகிறது.
Array
பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்- லில் 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் சேவையும் வழங்கப்படுகிறது. இதே பிஎஸ்என்எல்லில் மற்றொரு திட்டமான 187 ரூபாய் திட்டத்தில், 28 நாட்கள் வேலிடிட்டியும், தினசரி 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
Array
வோடபோன் ஐடியாவில் 819 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட சேவைகள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதே 795 ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் அதே டேட்டா, வாய்ஸ் கால் சேவைகள் வழங்கப்படுகின்றது. எனினும் வேலிடிட்டி மட்டும் சற்று குறைவு.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications