மயாமி: நாம் சில நேரங்களில் வழக்கமான நடைமுறைகளில் இருந்து விடுபட்டு வேறு இடங்களுக்கு சென்று விடுமுறையை கழிக்க நினைப்பது வழக்கமான ஒன்று தான். தெரியாத ஊர்களுக்கு முதல் முறை சென்று வந்தால், ஏதேனும் சிறு தவறுகளை செய்து பிறகு தெரிந்து கொண்டு சொந்த ஊர் திரும்புவோம். அனால் புளோரிடாவை சேர்ந்த ஜோடி குறிப்பிடத்தக்க ஒன்றை செய்துவிட்டு, பெரிய சிக்கலைச் சந்தித்துள்ளனர், அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
சமீபத்தில் அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஜோடிக்கு அதிர்ச்சியூட்டும் பில், அவர்களின் மொபைல் ஃபோன் ஆபரேட்டரிடமிருந்து வந்துள்ளது. அந்த மொபைல் ஃபோன் பில்லில் ரூ. 1,20 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய அவர்களுக்கு இது பெரிய ஷாக்காக இருந்தது. தகவல்களின்படி, அந்த ஜோடி ரெனே ரெமண்ட் மற்றும் அவரது மனைவி லிண்டா எனத் தெரியவந்துள்ளது.

இந்த ஜோடி, விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக, தங்களின் சொந்த ஊரான சுவிட்சர்லாந்திற்குச் சென்றுள்ளனர். அங்கு தங்கி, தங்களின் குழந்தைப் பருவ நினைவுகளோடு விடுமுறையை கழித்துவிட்டு ப்ளோரிடாவுக்கு, திரும்பிய அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக, அவர்கள் சுவிட்சர்லாந்தில் பயன்படுத்திய டேட்டா மற்றும் ரோமிங் கட்டணமாக, டீ மொபைல் ஆப்பரேட்டரிடமிருந்து $ 143,000 டாலர், செலுத்த வேண்டி, ஃபோன் பில் வந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ. 1.20 கோடி ரூபாய்.
மொபைல் ஃபோன் பில்லின்-படி, ஐரோப்பாவில் இருந்தபோது 9.5 ஜிபி டேட்டாவை ரெனே பயன்படுத்தியுள்ளார். 5 - 10 ஜிபி டேட்டா ஒன்றும் பெரிய தொகை இல்லை என்றாலும், ரோமிங் கட்டணத்தால் இவ்வளவு தொகை வந்துள்ளது என்று கூறப்படுகிறது.
சில அறிக்கைகளின்-படி புளோரிடா தம்பதியினர் தாங்கள் விடுமுறையில் இருந்த போது ஏராளமான ஃபோட்டோக்களை எடுத்து அவர்கள் தங்கி இருந்த சுவிட்சர்லாந்திலிருந்து, நாட்டிற்கு வெளியே உள்ள தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டனர் என்றும், இதனால் இந்த பில் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
டீ மொபைல் ஆப்பரேட்டரிடம் இருந்து வந்த ஃபோன் பில் புளோரிடா தம்பதியை திகைக்க வைத்தது. மேலும் இதற்கு முன்பு அவர்கள் சுவிட்சர்லாந்துக்குச் சென்று வந்திருக்கின்றனர். ஆனால் இதுபோல் இதற்கு முன் நடந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் ரெனே, அந்த மொபைல் ஃபோன் ஆப்பரேட்டருடன் நேரில் சென்று பேசிய பின்பும், அவர்கள் ரோமிங் கட்டணத்தை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
டீ மொபைல் ஆப்பரேட்டரிடம் இருந்து வந்த பில் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ரெனே தனது தரப்பில் வாதிக்க ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளார். அவரது வழக்கறிஞர் டி-மொபைலின் தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார், அதற்கு அவர்களிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே இது போன்ற பெரிய சிக்கல்களை சந்திக்காமல் இருக்க அந்தந்த ஊர்களில் இருக்கும் நடைமுறை மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறித்து முன்னரே அறிந்து, அதன் பின்பு உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள். இது தேவையற்ற செலவுகளை குறைக்க உதவியாக இருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications