அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டில் இருக்கக்கூடிய நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு விசா திட்டம் தான் ஹெச்1பி (H1B) விசா. இந்த திட்டத்தில் அமெரிக்காவில் வேலை செய்பவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். அந்த வகையில் ஹெச்1பி விசா திட்டத்தில் கொண்டுவரக்கூடிய எந்த ஒரு மாற்றமும் இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களை பெருமளவில் பாதிக்க செய்கிறது.
டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே விசா வழங்குவதில் பல்வேறு கெடுபிடிகளை கடைப்பிடித்து வருகிறது. விசா வேண்டி விண்ணப்பம் செய்பவர்களின் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் , கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவராக இருந்தால் அவரின் விசாக்களை ரத்து செய்யலாம் என அறிவித்திருக்கிறது.

இதனால் அமெரிக்க தூதரகங்கள் ஹெச்1பி விசா விண்ணப்பங்களை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவதற்கு வழக்கத்தை விட கூடுதலாக கால அவகாசம் எடுத்துக் கொள்கின்றன. பல மாதங்கள் வரை விண்ணப்பதாரர்கள் காத்திருக்கும் சூழல் உண்டாகி இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹெச்1பி விசா திட்டத்தை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
குடியரசு கட்சி எம்பி கிரேக் ஸ்டியூப் EXILE ACT என்ற பெயரில் ஒரு மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்1பி விசா நடைமுறையை தவறாக பயன்படுத்துகின்றனர் என கூறியிருக்கிறார். குறைந்த சம்பளத்தில் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை வரவழைத்து வேலை வாங்குகிறார்கள் இதனால் அமெரிக்க குடிமகன்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என கூறியிருக்கிறார்.
அமெரிக்கா குடிமகன்களின் நலன்களையும் தேசிய நலன்களையும் கருத்தில் கொள்ளாமல் ஹெச்1பி விசா திட்டத்தை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துகின்றன என அவர் கூறியிருக்கிறார். இந்த விசா மூலம் இங்கே வருகை தரக்கூடிய வெளிநாட்டவர்களால் அமெரிக்காவிலேயே பயின்ற ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிறார்.
அமெரிக்காவில் மருத்துவம் பயின்ற பத்தாயிரம் மருத்துவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை அதற்கு மாற்றாக வெளிநாட்டில் இருந்து 5000 மருத்துவர்களை வரவழைத்து நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்திருக்கின்றன எனக் கூறியிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனம் 16,000 அமெரிக்கர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு ஹெச்1பி விசாவில் 9 ஆயிரம் பேரை வரவழைத்து வேலைக்கு அமர்த்தி இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களும் அமெரிக்கர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டு ஹெச்1பி விசாவில் குறைந்த சம்பளத்திற்கு வெளிநாட்டிலிருந்து ஊழியர்களை அழைத்து வந்து வேலையில் அமத்துகின்றன என சுட்டிக்காட்டி இருக்கிறார். 2027ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என அவர் வாதிட்டுள்ளார்.
More From GoodReturns

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications