ஹவுதி-யிடம் கெஞ்சும் சவுதி அரேபியா.. காசு கொடுக்க ரெடி.. அட்டாக் மட்டும் வேண்டாம்..!

யெமன் நாட்டில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்து வந்த சவுதி அரேபிய அரசு, ஈரான் அரசின் வாயிலாகப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது.

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் நடந்த இப்பேச்சுவார்த்தையில், சவுதி தரப்பில் ஹவுதி படையினருக்கு 1 பில்லியன் டாலர் தொகையை ரொக்கமாகக் கொடுத்த தயார் என்றும் போர் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சவுதி இளவரசரும், பாதுகாப்பு அமைச்சருமான காலித் பின் சல்மான் தலைமையிலான குழு முன்வைத்துள்ளது.

ஹவுதி-யிடம் கெஞ்சும் சவுதி அரேபியா.. காசு கொடுக்க ரெடி.. அட்டாக் மட்டும் வேண்டாம்..!

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சவுதி இளவரசர் வந்த C-130 ராணுவ விமானத்திலேயே 1 பில்லியன் டாலர் பணத்தையும் தெஹ்ரானுக்கு கொண்டு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி இந்த போரை எப்படியாவது நிறுத்த வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கும் விலை உயர்வுக்கும் முக்கியமான காரணமாக இருக்கும் ஹவுதி - சவுதி அரேபியா மத்தியிலான போர் தாக்குதல் முக்கியக்கட்டத்தை எட்டியுள்ளது.

Also Read

வளைகுடாவில் அதிக எண்ணெய் வளம் மிக்க நாடாகவும், பணக்கார நாடாகவும் இருக்கும் சவுதி அரேபியா, யெமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சி படையின் வாயிலாகக் கடுமையான தாக்குதலை எதிர்கொண்ட வருகிறது.

ஹவுதி படையினர் திட்டமிட்டு சவுதி அரேபியாவின் எண்ணெய், விமான நிலையம், எரிபொருள் சேமிப்பு கட்டமைப்புகள், ஆராம்கோ நிறுவனம், சவுதி நாட்டின் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் சவுதி அரேபிய அரசு ஆட்டம் கண்டுள்ளது.

ஹவுதியின் போர் தாக்குதலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா உதவி செய்ய மறுத்துள்ளதாலும், உதவி செய்ய முன்வந்த இஸ்ரேலிடம், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காத காரணத்தால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளின் பகையை சம்பாதித்து விடக் கூடாது என்பதற்காக மறுத்துவிட்டது.

Recommended For You

இந்த நிலையில் சவுதி அரசு ஈரான் வாயிலாக ஹவுதி அமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. சமீபத்தில் சவுதி கையெழுத்திட்ட Mecca Joint Defence கூட்டணியில் இருக்கும் பாகிஸ்தான், துருக்கி நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தது.

மேலும் இக்கூட்டத்தில் ஈரான் நாட்டின் அதிபர் மசூத் பெசெஷ்கியான், அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் மொஹ்சென் ரெசாயி மற்றும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர படையின் மூத்த அதிகாரிகள் உடன் சவுதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தியது.

ஹவுதி கிளர்ச்சி படையினருக்கு இதுவரையில் அறிவிக்கப்படாத பெரும் தொகையாக இந்த 1 பில்லியன் டாலர் திகழ்கிறது. இதனால் ஹவுதி படைகள் இதை ஏற்குமா அல்லது மறுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+