இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டு எடுக்கும் விதமாக இன்று மத்திய நிதியமைச்சகம் பல்வேறு முக்கியப் பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது கடன் உத்தரவாத திட்டம்
கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட துறை நிறுவனங்களை மீட்டு எடுப்பதற்காக 1.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன் உத்தரவாத திட்டத்தை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன்
இத்திட்டம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. முதலில் சுகாதாரத் துறைக்கு 50000 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கடனாக அளிக்கப்பட உள்ளது. இந்தக் கடன் திட்டம் மூலம் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் மருத்துவ உள் கட்டமைப்பை மேம்படுத்த முடியும்.
இத்திட்டத்தின் கீழ் அதிகப்படியாக ஒருவருக்கு 100 கோடி ரூபாய் தொகையை 3 வருட காலத்திற்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இத்திட்டத்திற்கு 7.95 சதவீதம் வரையிலான வட்டி மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சுகாதாரத் துறை சார்ந்த நிறுவனங்களின் புதிய திட்டம் மற்றும் விரிவாக்கத்திற்கு நேஷ்னல் கிரெடிட் கேரன்டி டிரஸ்ட் கம்பெனி லிமிடெட் உத்தரவாதம் அளிக்கிறது.
2வதாகப் பிற துறைகள்
சுகாதாரத் துறை தாண்டி பிற துறைகளுக்கு வருடம் 8.25 சதவீதம் வட்டியில் சுமார் 60000 கோடி ரூபாய் அளவிலான தொகை கடன் உத்தரவாதம் அளிக்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பொதுவாக உத்தரவாதம் அல்லாத கடன்களுக்கு 10 முதல் 11 சதவீதம் வரையிலான வட்டி விதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications