டெல்லி : இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பீதியின் மத்தியில் பொருளாதாரம் என்னவாகுமோ? அரசு மக்களுக்கு போதிய நிவாரணம் அளித்தால் நன்றாக இருக்கும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பே நடந்த கூட்டத்தில் விரைவில் போதிய நிதி சம்பந்தமான அறிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அறிவித்து வரும் நிதி சம்பந்தமான அறிக்கையில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடையக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டில் லாக்டவுன் அறிவித்த சில நாட்களுக்குள்ளேயே மக்களுக்கான சிறப்பு நிதி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இது மட்டும் அல்ல, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதே முன்னதாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் முதல் தவணை உடனடியாக வழங்கப்படுகிறது. சுமார் 8.7 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.
நாட்டில் 63 லட்சம் சுய உதவிக் குழுக்கள் இருக்கும் நிலையில், பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லாத கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது அவர்கள் மட்டும் அல்லாது அவரது குடும்பங்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதே தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் தலா 12% பிஎஃப் தொகையை மத்திய அரசு அடுத்த 3 மாதங்களுக்கு செலுத்தும் என்றும் கூறியுள்ளார்.
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு 182 ரூபாயிலிருந்து, 202 ரூபாயாக ஊதிய உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 5 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும், மேலும் அவர்களுக்கு வருமானம் 2,000 ரூபாயாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications