தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய சொந்த நிதி நெருக்கடி பிரச்சனை காரணமாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

டைம்ஸ் நவ் உச்சி மாநாடு 2024 இல், பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், என்னிடம் நாடாளுமன்றத் தேர்தல் போட்டியிடக் கோரிக்கை வந்தபோது "ஒரு வாரம், 10 நாட்கள் யோசித்த பிறகு, நான் திரும்பிச் சென்று 'மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாது' என கூறினேன், மக்களவை தேர்தலில் போட்டியிட என்னிடம் அவ்வளவு பணம் இல்லை," என்றும் இந்த பேட்டியில் நிர்மலா கூறினார்.

தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு குறித்து முழு விபரத்தையும் இப்போது பார்ப்போம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரின் ஜெயநகர் 4வது டி பிளாக் பகுதியில் வசித்து வருகிறார், இதேபோல் டெல்லியில் சஃப்தர்ஜங் சாலையில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார். இது இரண்டும் இவரின் சொந்த வீடு இல்லை என்பது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் மற்றும் அவருடைய கணவர் பரகால பிரபாகர் இணைந்து ஹைதராபாத் நகரின் அருகில் மஞ்சிரெவுலா என்னும் கிராமத்தில் சுமார் 1.70 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை 50:50 பங்கீட்டில் ஒரு வீட்டை வைத்துள்ளனர்.

2016ல் சொத்து மதிப்பு தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் இந்த வீட்டை 99.36 லட்சம் ரூபாய்க்கு மதிப்பிடப்பட்ட நிலையில், 2022 சொத்து மதிப்பு தாக்கலில் 1.7 கோடி ரூபாய் என கணக்கிட்டுக் குறிப்பிட்டு இருந்தார். இதோடு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியாக 17.08 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் வைத்துள்ளார்.

மஞ்சிரெவுலா கிராமத்தில் இருக்கும் வீடும், விவசாய நிலமும் தான் நிர்மலா சீதாராமனுக்குச் சொந்தமான அசையா சொத்துக்கள் மற்ற அனைத்தும் அசையும் சொத்துக்கள் பிரிவில் வருகிறது.

நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள தகவல் படி 28,200 ரூபாய் மதிப்புள்ள பஜாஜ் செட்டாக் ஸ்கூட்டர், 315 கிராம் தங்க நகைகள், 5.282 கிலோ வெள்ளி பொருட்கள், வங்கி கணக்கில் 35.52 லட்சம் ரூபாய் ஆகியவற்றை வைத்துள்ளார். இன்றைய மதிப்பில் இந்த தங்கத்தின் மதிப்பு 19,84,500 ரூபாய், வெள்ளியின் மதிப்பு 4,10,939.6 இவை இரண்டும் இன்றைய விலை மதிப்புக்கு கணக்கிடப்பட்டு உள்ளது.

இதுபோக பிபிஎப்-ல் 1.59 லட்சம் ரூபாய், மியூச்சுவல் பண்டில் 5.80 லட்சம் ரூபாய், பணமாகக் கையில் 7350 ரூபாய், தனிநபராக இவர் கொடுத்த 2.70 லட்சம் ரூபாய், இதர பிரிவுகளில் 5.08 லட்சம் ரூபாய் இவருடைய அசையும் சொத்துக்களாக உள்ளது.

மேலும் நிர்மலா சீதாராமன் மற்றும் அவருடைய கணவர் பரகால பிரபாகர் இணைந்து கனரா வங்கியில் 5.44 லட்சம் ரூபாய் ஹோம் லோன், அடமான கடனாக 18.93 லட்சம் ரூபாய்க்கும், ஓவர்டிராப்ட் பிரிவில் 2.53 லட்சம் ரூபாய்க் கடன்களை வைத்துள்ளனர்.

பிரதமர், மத்திய அமைச்சர்கள் என மூத்த தலைவர்கள் தன்னார்வ சொத்து அறிவிப்பின் கீழ் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் அவரிடம் எவ்வளவு பணம், சொத்துக்கள் இருக்கிறது என்பது பிஎம் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் படி மத்திய நிதியமைச்சர் சொத்து விபரங்கள் தெரிய வந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+