மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் இருக்கும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) கடன் வழங்க வங்கிகளுக்கு புதிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளார்.
11வது எஸ்பிஐ வங்கி மற்றும் பொருளாதார கூட்டத்தில் நிதியமைச்சர் பேசிய போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் MSME துறையின் அதிரடியான வளர்ச்சிக்கு வித்திட, 2025-26 நிதியாண்டில் எம்எஸ்எம்இ நிறுவனங்ளுக்கு ரூ.6.12 லட்சம் கோடியும், 2026-27 நிதியாண்டில் ரூ.7 லட்சம் கோடியும் கடனாக வழங்க வங்கிகளை வலியுறுத்தினார்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து பெரிய உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான உதிரிபாங்கள், துணை பொருட்கள், முக்கிய சேவைகளை அளிப்பதில் MSME நிறுவனங்கள் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதனால் நாட்டின் உற்பத்தி துறைக்கு எப்போதும் MSME தான் முதுகெலும்பு, இதன் காரணமாகவே MSME துறைக்கு அதிகப்படியான கடன்களை அளிக்க மத்திய நிதியமைச்சர் வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.
இன்று மும்பையில் Making Aspiration of Viksit Bharat a Reality தலைப்பில் நடைப்பெற்ற கூட்டத்தில் பேசிய அவர் MSME கடனுக்கான டார்கெட் அறிவித்த அவர், இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளாதாக சுட்டிக்காட்டினார்.
2013-14ல் 10வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, 2021-22ல் 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். வங்கிகள் இந்த வளர்ச்சிப் பாதையை துரிதப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும் பேசினார் நிர்மலா சீதாராமன்.
டிஜிட்டல் சேவைகளின் வாயிலாக இந்தியாவில் அனைவருக்கும் நிதி சேவைகளை அளிக்கப்பட வேண்டும் என்றும், digital financial inclusion-னின் முக்கியத்துவத்தை நிதியமைச்சர் இக்கூட்டத்தில் வலியுறுத்தினார். மேலும் வங்கிகள் செலவு குறைந்த டிஜிட்டல் சேவைகள் வாயிலாக நாட்டின் மூலை முடுக்குகள் உள்ள மக்களுக்கும் மேம்பட்ட சேவையை அளிக்க முடியும் என நம்புகிறார்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications