இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு, நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் இரு நாள் கூட்டம் முடிந்த நிலையில் இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இக்குழுவின் முடிவுகளை வெளியிட உள்ளார்.
ஆர்பிஐ-யின் எம்பிசி குழு தொடர்ந்து ஆறாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்திருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகச் சந்தை கணிப்புகள் கூறினாலும், பட்ஜெட் அறிவிப்பு, தேர்தலுக்கு மத்தியில் சாமானிய மக்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் வட்டி விகிதத்தில் குறைப்புக்கான எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

மோடி தலைமையிலான அரசு 2வது முறை ஆட்சியில் கடைசிப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாட்டின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருந்த நிலையிலும், நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வரும் வேளையில் ஆர்பிஐ வட்டி விகிதம் குறைப்புக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது.
சந்தை கணிப்புகளின் படி இன்று ஆர்பிஐ தனது நாணய கொள்கை கூட்டத்தில் withdrawal of accommodation அதாவது சந்தையில் இருந்து பணத்தைக் குறைக்கும் அளவீட்டை நியூட்ரல் ஆக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் நிதியாண்டின் கடைசி நாணய கொள்கை கூட்டமாக இது உள்ளது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்காவிடில் தொடர்ந்து 6வது முறையாக வட்டி விகிதத்தைக் குறைக்காத நிலை ஏற்படும்.
தற்போது மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனை கச்சா எண்ணெய் விலை, உணவு பணவீக்கம் தான். இவ்விரண்டின் தாக்கம் நாட்டின் நுகர்வோர் பணவீக்கத்தை அதிகரித்தும், கச்சா எண்ணெய் விலை குறையும் வாய்ப்புகள் தொடர்ந்து மாயமாகி வரும் வேளையில் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.


Click it and Unblock the Notifications