நிர்மலா சீதாராமன் ப்ரீ பட்ஜெட் கூட்டம்.. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வைத்த முக்கிய கோரிக்கை..!!

பிரதமர் நரேந்திர மோடியின் 3வது ஆட்சியின் முதல் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில், வரி செலுத்துபவர்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நிர்மலா சீதாராமன் ப்ரீ பட்ஜெட் கூட்டம்..  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வைத்த முக்கிய கோரிக்கை..!!

இக்கூட்டத்தில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கோவா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மாநில முதல்வர்கள், பீகார், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் துணை முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் பிற அமைச்சர்கள் மற்றும் மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்கள் - மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அனைவரையும் நிதித்துறை செயலாளர் வரவேற்றுக் கூட்டத்தைத் துவங்கி வைத்தார், இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் நிர்மலா சீதாராமன்-யிடம் நேரடியாக 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கள் மாநிலங்களுக்கான குறிப்பிட்ட கோரிக்கைகளைச் சேர்க்க ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் முக்கியமாகத் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தேர்தலுக்கு முன்பே நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தாலும், இந்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் ஜூலை மாதம் இறுதி வாரத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் வெறும் இடைக்கால பட்ஜெட்டின் நீட்சியாக பார்க்கப்படாமல் அடுத்த 5 ஆண்டு மோடி அரசின் பொருளாதார - வர்த்தக கொள்கையின் ரோட்மேப் ஆக பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர், மாநிலங்களுக்கு சரியான நேரத்தில் வரிப் பகிர்வு அளிக்கப்பட்டு, பைனான்ஸ் கமிஷன் மானியங்கள் வழங்கப்பட்டும், ஜிஎஸ்டி இழப்பீட்டின் நிலுவைத் தொகை ஆகியவற்றை தொடர்ந்து அளிப்பதன் மூலம் மாநிலங்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து மத்திய அரசின் ஊக்கமளித்து வருகிறது என தெரிவித்தார்.

இதேபோல் மாநிலங்களை, மத்திய அரசு 50 ஆண்டு வட்டியில்லா கடன் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+