பட்ஜெட்க்கு பிந்தைய நாடாளுமன்ற விவாதம் எதிர்பார்ப்பைக் கடந்து காரசாரமாக உள்ளது, திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்து பேசியும், பட்ஜெட்-க்கு முன்பு நடந்த ஹல்வா நிகழ்ச்சியின் புகைப்படத்தை வைத்துப் பேசியது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறியது. ராகுல் காந்தி பேசும் போதும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையிலும், பட்ஜெட் தொடர்பான விமர்சனத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2024-25 விவாதத்திற்குப் பதிலளித்தார்.

இந்த நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் குறித்துப் பேசிய மற்றும் ஆர்வம் காட்டிய ஒவ்வொரு உறுப்பினருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாகப் பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு அமைக்க வாய்ப்பு வழங்கியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது பிரதமர் மோடி தலைமையிலான அட்சி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையாகும். 2047க்குள் விக்சித் பாரத் உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் எனத் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன்..
இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக உள்ளது. அதிகப்படியான மூலதன செலவினத்தின் மூலம் கொரோனா தொற்றுநோய்க்கு பிந்தைய பாதிப்புகளை இந்திய பொருளாதாரம் மொத்தமாக மீண்டு வந்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் எந்த துறைக்கும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை நாடாளுமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக நாடாளுமன்றத்தில் இன்று நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
நான் 2004-2005, 2005-2006, 2006-2007, 2007-2008 மற்றும் பல நிதியாண்டுக்கான பட்ஜெட் உரைகளில் ஆய்வு செய்கையில், 2004-2005 பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இடம்பெறவில்லை. அப்போதைய UPA ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களை நான் கேட்க விரும்புகிறேன் - அந்த 17 மாநிலங்களுக்குப் பணம் செல்லவில்லையா? UPA அரசு நிதியுதவியை நிறுத்தினார்களா? அவர்கள் அதை நிறுத்தியிருந்தால், கேள்விகளை எழுப்ப அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது,”என்று நிதி அமைச்சர் பேசியுள்ளார்.
மேலும் நாட்டில் எந்த மாநிலத்திற்கும் நிதியுதவியை மத்திய அரசு மறுக்கவில்லை, நாங்கள் எந்த மாநிலத்திற்கும் பாரபட்சம் காட்டவில்லை என தெரிவித்தார்.
மேலும் இந்தியப் பொருளாதாரம் நிதிப் பற்றாக்குறைப் பாதைக்கு இணங்க பயணித்து வருகிறது. 2025-26 ஆம் நிதியாண்டுக்குள் நாட்டின் நிதி பற்றாக்குறை 4.5 சதவீதத்திற்கும் கீழே கொண்டு வரும் பாதையில் செல்கிறது.
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஜம்மு காஷ்மீர்-க்கு 17,000 கோடி ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளோம். இதில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் செலவுக்கு மட்டும் 12,000 கோடி ரூபாய் நிதியளிக்கப்பட்டுள்ளதை நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுத் தெரிவித்தார்.
2013-14ல் விவசாய துறைக்கான ஒதுக்கீடு 0.30 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது 1.52 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 8,000 கோடி அதிகம், அதாவது 2023-24ல்.
2013-14ல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு 0.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று அது 1.48 லட்சம் கோடியாகவும், கடந்த ஆண்டை காட்டிலும் 23% கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
15-59 வயதிற்குப்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் ஜம்மு காஷ்மீர்-க்கு 2020-21 இல் 6.4% ஆக இருந்து 2021-22 இல் 5.7% ஆக 2022-23 இல் 4.4% ஆக குறைந்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications