நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் வேளையில், இந்தியாவை அடுத்த 5 வருடம் ஆட்சி செய்யப்போவது யார் என்ற போட்டி நாளுக்கு நாள் கடுமையாகி வருகிறது. ஒருபக்கம் இந்த முறை இந்தியாவில் கூட்டணி ஆட்சிக்கு தான் அதிகப்படியான வாய்ப்பு என பேச்சு நிலவினாலும் மறுபுறம் பிஜேபி, காங்கிரஸ் ஆதிக்கத்துடன் ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் உள்ளது.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய சொந்த நிதி நெருக்கடி பிரச்சனை காரணமாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

டைம்ஸ் நவ் உச்சிமாநாடு 2024 இல், பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், என்னிடம் நாடாளுமன்ற தேர்தல் போட்டியிட கோரிக்கை வந்தபோது "ஒரு வாரம், 10 நாட்கள் யோசித்த பிறகு, நான் திரும்பிச் சென்று 'மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாது' என கூறினேன், மக்களவை தேர்தலில் போட்டியிட என்னிடம் அவ்வளவு பணம் இல்லை," என்றும் இந்த பேட்டியில் நிர்மலா கூறினார்.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தனக்கு ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்பு அளித்ததாகவும் தெரிவித்த அவர், பிஜேபி பயன்படுத்திய பல்வேறு வெற்றிக்கான அளவுகோல்கள் மற்றும் அந்த பாத்திரத்திற்கான அவரது பொருத்தம் குறித்து நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்தார்.
"எனது சம்பளம், எனது வருமானம் மற்றும் எனது சேமிப்பு ஆகியவை என்னுடையது, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியல்ல" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பேட்டியில் கூறினார். கடந்த 10 வருட பிஜேபி ஆட்சியில் நிர்மலா சீதாராமன் ஒரு ஸ்டார் அமைச்சர் என்பதால் இவர் எங்குப் போட்டியிடுகிறார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியிலும் இருந்தது.
பியூஷ் கோயல், பூபேந்தர் யாதவ், ராஜீவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா போன்ற பிற ராஜ்யசபா உறுப்பினர்களை மக்களவைத் தேர்தலில் களமிறக்க பாஜக முடிவு எடுத்தது. நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் நேரடியாக மக்களைச் சந்திக்க நிர்மலா சீதாராமன் விரும்பாவிட்டாலும், பிஜேபி-யின் மற்ற வேட்பாளர்களை ஆதரிப்பதில் தனது உறுதிப்பாட்டைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ராஜீவ் சந்திரசேகர் அவர்களுக்காக நிர்மலா சீதாராமன் பிரச்சாரம் செய்வதற்கும், ஊடக நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications