மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை அன்று, அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 1961 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இன்று வரையில் நடைமுறையில் இருக்கும் வருமான வரிச் சட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் இந்த புதிய சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது. நாட்டின் வரி முறையை நவீனமயமாக்கவும், எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தவுடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், இந்த வரைவுச் சட்டத்தை அவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கு அனுப்பி, கருத்துக்கள் மற்றும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மேல் பரிசீலனை செய்ய வேண்டும் என்று முறையாக கோரிக்கை விடுத்தார்.

மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றியது, புதிய வருமான வரி மசோதா தொடர்ந்து பரிசீலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்த வழிவகுத்துள்ளது.
புதிய வருமான வரி கொள்கையை தாக்கல் செய்ய நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், இப்புதிய சட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுக்கு (select committee) அனுப்புவதன் முக்கியத்துவத்தை விளக்கி, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2ஆம் பகுதி துவங்கும் முதல் நாளுக்குள் அக்குழு தனது விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டி கேட்டுக்கொண்டார்.
மேலும், இக்குழுவின் செயல்பாட்டு விதிகள் தொடர்பான முடிவை சபாநாயகரின் விருப்பத்தின் அடிப்படையில் அமைக்கப்படும். இந்த குழுவின் ஆய்வு பாரபட்சமின்றி, முழுமையானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய வருமான வரி மசோதாவில் பிப் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட வரி மாற்றங்கள் மட்டுமே புதிதாக திருத்தப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே இருந்து விதிமுறையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், வரி விதிமுறைகளில் பயன்படுத்தப்படும் சட்ட மொழியை எளிமைப்படுத்துவதாகும். இதன் மூலம், வரி செலுத்துபவர்கள் விதிகளை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் திருத்தப்பட்டு உள்ளது.
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications