அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் வேளையில், அந்நாட்டு மத்திய வங்கி வட்டி குறைத்த பின்பு அமெரிக்க கார்ப்ரேட் நிறுவனங்கள் தனது கையிருப்பில் அதிகப்படியான நிதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் நிற்கிறது. இதை இந்தியாவுக்கு முதலீட்டு வாய்ப்பாக மாற்றும் முயற்சியில் மத்திய நிதியமைச்சர் களத்தில் இறங்கியுள்ளார்.
மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது மெக்சிகோ பயணத்தை வெற்றிகரமாக முடித்த பின்பு அமெரிக்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். அமெரிக்காவின் நெவார்க் (Newark) லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய நிர்மலா சீதாராமனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதர் பினயா ஸ்ரீகாந்த பிரதான் ஆகியோர் மெக்சிகோ நகரில் இருந்து வந்த நிர்மலா சீதாராமனை விமான நிலையத்தில் வரவேற்றனர். அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பல முக்கிய நிறுவனத் தலைவர்களையும், அமைப்புகளையும் இந்த பயணத்தில் சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது.
நிர்மலா சீதாராமன் அக்டோபர் 17 முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை மெக்சிகோ நாட்டில் பல முக்கிய கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்தியா - மெக்சிகோ நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தக உறவை மேம்படுத்தப் பல முக்கிய கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். நிர்மலா சீதாராமன் மெக்சிகோ நாட்டில் குவாடலஜாரா (Guadalajara) மற்றும் மெக்சிகோ சிட்டி-யில் (Mexico City) பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு நிர்மலா சீதாராமன் மெக்சிகன் நாட்டு முதலீட்டாளர்களிடம், இந்தியாவின் உலகளாவிய உள் திறன் மையங்கள் (GICCs), விமானக் குத்தகை, கப்பல் குத்தகை மற்றும் GIFT-IFSC இல் வெளிநாட்டு பல்கலைக்கழக அமைப்புகளில் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவும், முதலீடு செய்யவும் அழைத்தார். இதேபோல் GIFT-IFSC உலகிளவில் ரீஇன்சூரன்ஸ் மற்றும் நிலையான நிதியியல் சேவைக்கான ஹப் ஆக வளர்ந்து வருகிறது என்பதையும் குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து நிர்மலா சீதாராமன் வருகையின் போது இந்தியா-மெக்சிகோ வர்த்தகம் மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், இதிலும் நிதியமைச்சர் பங்கேற்றார், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான முக்கிய படியாக இந்த உச்ச மாநாடு பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும், குறிப்பாக மருந்துகள், மெட்டெக் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் இருநாடுகள் மத்தியிலான கூட்டணியை மேம்படுத்த இரு நாடுகளின் தனியார் துறை தலைவர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர் என்பது இக்கூட்டத்தின் வாயிலாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும் உற்பத்தி, பார்மா மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் இந்தியாவின் வலிமையை வலியுறுத்தி, இந்தியாவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையே பல துறைசார் கூட்டாணி முயற்சிகளுக்கான சாத்தியம் இருப்பதை இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 2016 மெக்சிகோ பயணத்தின் போது, இந்தியா-மெக்சிகோ உறவுகளை 'Privileged Partnership' என்பதிலிருந்து 'Strategic Partnership' என உயர்த்தியதையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முறை இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications