இந்தியாவுக்கு பிரச்சினை உள்நாட்டில் இல்லை! வெளியில் தான் உள்ளது! நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்!

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை தொடர் அதிகரிப்பில் உள்ளது. இதனால் அதை சார்ந்துள்ள பிற நிறுவனங்களும் விலை உயர்வை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஒரு சில மாதங்களாக எந்த ஏற்ற இறக்கமும் இல்லாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் நான்கு முறைக்கு மேல் பெட்ரோல் டீசலின் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் விலை ரூ.7.5 வரை அதிகரித்துள்ளது. எனவே போக்குவரத்து செலவுகளைக் கருத்தில் கொண்டு, இந்திய குடும்பங்களுக்கு உதவும் வகையில் அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவித்துள்ளது.

மே 25 ஆம் தேதி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைப்பதால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதார நிலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவை குறித்தும் சில கருத்துக்களை முன்வைத்தார். அப்போது தான் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து அறிவித்தார்.

இந்தியாவுக்கு பிரச்சினை உள்நாட்டில் இல்லை! வெளியில் தான் உள்ளது! நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்!

சமீப காலமாக இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது என்று எழும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிர்மலா சீதாராமன், "இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் உள்நாட்டில் உருவானவை அல்ல. வெளியில் இருந்தும் இந்தியாவிற்கு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒரு சில விஷயங்களுக்கு இந்தியா வெளிநாட்டையே சார்ந்துள்ளது. தங்கம், கச்சா எண்ணெய் மற்றும் வேளாண் துறைக்கு தேவைப்படும் உரங்கள் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து தான் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுகிறது. இப்படி இறக்குமதி செய்யப்படுவதால் அந்நிய செலாவாணி அதிகரிக்கிறது.

இப்படி டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு தான் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கிறதே தவிர, உள்நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உலக அளவில் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தாலும், வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரம் கொண்ட நாடாகவே இந்தியா இருக்கிறது" என்று கூறியுள்ளார். இந்தியாவின் வளர்ச்சி குறித்து சிலர் வேண்டுமென்றே தவறான கருத்துக்களை முன்வைக்கின்றனர். போர் பதற்றத்திற்கு மத்தியிலும் நாம் பொருளாதார ரீதியாக வளர்ச்சியை தான் எட்டியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+