இந்திய பொருளாதாரம் சில சவால்களை எதிர்கொள்கிறது.. நிர்மலா சீதாராமன்..!

டெல்லி : கடந்த ஞாயிற்றுகிழமையன்று நிதி சம்பந்தமான ஒரு புத்தகத்தை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது இந்திய பொருளாதாரம் சில சவால்களை மேற்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட The Rise of Finance என்ற புத்தகத்தில், தற்போது நாட்டில் நிலவி வரும் உலகப் பொருளாதாரம் மற்றும் இந்திய பொருளாதாரம் எதிர்கொள்ளும் நிலையை புரிந்துக் கொள்ள இந்த புத்தகம் உதவும் என்றும் கூறியுள்ளார்.

இது பொருளாதார கொள்கை வகுக்கும் மேசையில் எங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரு புத்தகமாக இருக்கும். மேலும் இரண்டாவதாக இந்த புத்தகம் வெளியிடும் நேரமும், இந்தியாவில் நிலவி வரும் சவாலான நேரத்தில் ஒரு பொருத்தமானதாக இருக்கிறது. ஏனெனில் நாங்கள் தற்போது சவாலான நேரத்தை இந்தியாவில் எதிர்கொள்கிறோம் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

The Rise of Finance வெளியீடு

The Rise of Finance வெளியீடு

இந்த The Rise of Finance புத்தகத்தை வி அனந்த நாகேஸ்வரன் மற்றும் குல்சார் நடராஜன் இணைந்து எழுதியுள்ளனர். இவர்களில் நாகேஸ்வரன் கிரியா பல்கலைக் கழகத்தின், ஐ.எஃப்.எம்.ஆர் வணிகப்பள்ளியின் டீன் ஆவார். இட்ஹே நடராஜன் குளோபல் புதுமை நிதியத்தின் மூத்த நிர்வாக இயக்குனராக உள்ளார் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

படு வீழ்ச்சி

படு வீழ்ச்சி

இந்த நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஜுன் காலாண்டில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவிகிதமாக சரிந்தது. ஏனெனில் நுகர்வோர் தேவை குறைந்து கொண்டே வருவதாலும், மோசமான உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில், தனியார் முதலீடும் குறைந்து வருவதால், பொருளாதார வளர்ச்சி ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. இதனால் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது.

வீழ்ச்சிக்கு காரணம் இது தான்

வீழ்ச்சிக்கு காரணம் இது தான்

இது 2019 - 2020ம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியை வேறு பட்ட விகிதங்களில் குறைக்க வழி வகுத்துள்ளது. மேலும் இது உலகளாவிய நிறுவனங்களை முதலீடுகளை குறைக்க தூண்டியது என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபர் மாதம் நாணயக் கொள்கை மதிப்பீட்டில் தொடர்ந்து மாற்றம் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.9 சதவிகிதத்திலிருந்து, 6.1 சதவிகிதமாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் காலாண்டுகளில் கைகொடுக்கும்

வரவிருக்கும் காலாண்டுகளில் கைகொடுக்கும்

இதுவரை பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி காணவில்லை. இந்திய பொருளாதாரம் வலுவாகத் தான் இருக்கிறது என்று கூறி வந்த நிதியமைச்சர், தற்போது தான் இந்திய பொருளாதாரம் சில சவால்களை மேற்கண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த நிலையை மேம்படுத்த அரசு எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் வரவிருக்கும் காலாண்டுகளில் கைகொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+