பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியுள்ள நிலையில், எப்போதும் இல்லாமல் இந்த முறை 2 நாட்களுக்கு முன்னதாகவே பொருளாதார மதிப்பாய்வு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பொதுவாகப் பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நாள் எக்னாமிக் சர்வே எனப்படும் பொருளாதார மதிப்பாய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும், இந்த முறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 நாட்கள் முன்னதாக வெளியிடப்பட்டு உள்ளது.
கிருஷ்ணமூர்த்திச் சுப்பிரமணியன்
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்திச் சுப்பிரமணியன் தலைமையிலான குழு இந்தப் பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையை இந்த வருடம் தயாரித்துள்ளது.
இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
5 டிரில்லியன் டாலர் கனவு
2019ல் அரவிந்த் சுப்பிரமணியன் தயாரித்த முதல் எக்னாமிக் சர்வே அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவை நினைவாக்கும் வகையில் வருடம் 8 சதவீத வளர்ச்சியில் 2024-25ஆம் நிதியாண்டில் இந்தியா தனசு இலக்கை அடையும் என நிர்ணயம் செய்தார்.
கொரோனா பாதிப்பு
ஆனால் 2020ல் கொரோனா பாதிப்புக் காரணமாக இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவீதம் வரையில் சரிந்தது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் காலாண்டில் -7.5 சதவீதமாக இருந்தது.
எக்னாமிக் சர்வே
இன்று வெளியாகியுள்ள எக்னாமிக் சர்வே அறிக்கையில் நாட்டின் பொருளாதாரத்தின் நிலை, கொள்கை மாற்றம், ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிலை மற்றும் தேவையான மாற்றங்கள் குறித்த தகவல்கள் இருக்கும். இது பட்ஜெட் அறிக்கையில் வெளியாக இருக்கும் கொள்கை மாற்றங்களின் ஒகு முன்னோட்டமாக இந்த எக்னாமிக் சர்வே இருக்கும்.
பட்ஜெட் திட்டங்கள்
இந்நிலையில் கடந்த 12 மாதத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறித்துத் துறைவாரியான நிலவரங்கள் இந்த எக்னாமிக் சர்வே அறிக்கையில் இருக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில் வளர்ச்சி திட்டங்கள், கொள்கை மாற்றங்கள், நிதி ஒதுக்கீடு அமையும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications