நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார். இது அவரது 7-வது தொடர்ச்சியான பட்ஜெட்டாகும். சி டி தேஷ்முக்கிற்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய 2-வது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இது மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் ஆகும். மேலும் இது "Viksit Bharat 2047 Vision"-க்கு ஏற்ப பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி: வருமான வரி விலக்கு மற்றும் வருமான வரி விலக்கு வரம்புகளை உயர்த்துவது உள்ளிட்ட மாற்றங்களை நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய வரி முறையின் விலக்கு தற்போதைய ரூ. 3 லட்சத்தில் இருந்து குறைந்தபட்சம் ரூ. 4 லட்சமாக நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய வரி முறையில் வருமான வரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை: ரூ. 15 லட்சத்திற்கு மேல் வருமானம் வரி செலுத்துவோர், பழைய வரி முறையையே இன்னும் விரும்புகிறார்கள்.
எனவே புதிய வரி முறைக்கு மாறுவதற்கு அரசாங்கம் அவர்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 25% வரி விகிதத்துடன் ரூ. 15 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு புதிய ஸ்லாப்பை அறிமுகப்படுத்தலாம்.
ரியல் எஸ்டேட் துறை: ரியல் எஸ்டேட் துறையினர் இந்த பட்ஜெட்டில் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். வரிச் சலுகைகள் முதல் மலிவு விலை வீடுகள் மற்றும் நிலம் தொடர்பான அறிவிப்புகள் வரை சில கோரிக்கைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விலக்கு: பிரிவு 24B-இன் கீழ் வீட்டுக் கடன்களுக்கான வட்டி வரி விலக்கு வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்துவது ஒரு முக்கிய கோரிக்கையாக உள்ளது.
மலிவு விலை வீட்டுவசதி: மலிவு விலை வீட்டுவசதிக்கான செலவு, மற்றும் வருமான வரம்புகளை PMAY திட்டத்தின் கீழ் அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளது.
MSMEகள் என்ன எதிர்பார்க்கின்றனர்: MSMEகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வழங்கிக் கொண்டிருக்கிறார். எந்தெந்த துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. மேலும் மக்களின் தேவை அங்கீகரிக்கப்பட்டதா? என்பது போன்ற விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications