இந்தியாவில் அடுத்த பெரும் டிஜிட்டல் புரட்சியை உருவாக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியாவில் UPI வெற்றியை தொடர்ந்து Unified Lending Interface - ULI அறிமுகப்படுத்துவதற்கு பின்டெக் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ULI என்றால் என்ன..? ஏன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்டெக் துறை நிறுவனங்களை அழைத்தார்..? இதன் மூலம் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் என்ன பயன் ..?என்பதை விரிவாக பார்ப்போம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில் நடந்த டிஜிட்டல் பேமெண்ட் விருதுகள் விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, "UPI-யைப் போலவே, நாம் இப்போது டிஜிட்டல் கடன் வழங்குவதற்காக ஒருங்கிணைந்த கடன் தளத்தை உருவாக்கு பாதையை நோக்கி நகர்கிறோம்" என்று கூறினார்.
UPI தளம் பணம் செலுத்துவதை எளிமையாக்கி, இது இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் பெரும் புரட்சியை உண்டாக்கியது. அதேபோல், ULI, கடன் வழங்கும் செயல்முறையை எளிமையாக்கி, குறிப்பாக கிராமப்புற மக்கள் மற்றும் MSMEs-களுக்கு விரைவாகவும், எளிதாகவும் கடன் கிடைக்கச் செய்யும் என நிர்மலா சீதாராமன் பேசினார்.
ULI எப்படி இயங்கும்?:
டிஜிட்டல் கடன் விண்ணப்பம்: வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பயனர்களை ஒரே தளத்தில் இணைக்கும், இதனால் மக்கள் கடன் விண்ணப்பங்களை ஆன்லைனில் எளிதாக பதிவு செய்யும் வாய்ப்பை அளிக்கும். UPI தளம் எப்படி அனைத்து வங்கிகளையும் ஓரே இடத்தில் இணைக்கிறதோ, அதேபோல் ULI தளமும் கடன் சேவை அளிக்கும் நிறுவனங்களை இணைக்கும்.
விரைவான ஒப்புதல்: கடன் வழங்குவதில் பேப்பர் வொர்க்-ஐ குறைத்து, கடன் ஒப்புதல் செயல்முறையை டிஜிட்டல் வாயிலாகவே விரைவுபடுத்தி ஒப்புதல் அளிக்கப்படும். இதன் மூலம் கிராமப்புற மக்கள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு முறையான கடன் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெறுவார்கள்.
செலவு குறைப்பு: மேலும் வங்கிகளுக்கு கடன் விநியோகத்தின் செலவை குறைத்து, மலிவு விலையில் கடன்களை கிடைக்கச் செய்யும். ULI, இந்தியாவின் பின்டெக் துறையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைஜிட்டல் நிதி (Phygital Finance) என்றால் என்ன?
பைஜிட்டல் நிதி என்பது, பிசிக்கல் (Physical) மற்றும் டிஜிட்டல் (Digital) சேனல்களின் இணைப்பாகும், இது நிதி சேவைகளை மக்களுக்கு எளிதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுகிறது. இந்த அணுகுமுறை, டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வேகத்தையும், பிசிக்கல் சேவைகளின் நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கிறது மக்களுக்கு வழங்குகிறது.
பைஜிட்டல் நிதி எவ்வாறு இயங்குகிறது?
டிஜிட்டல் சேவைகள்: மொபைல் செயலிகள், ஆன்லைன் தளங்கள் மற்றும் UPI போன்ற டிஜிட்டல் சேவைகள் இணைக்கப்பட்டு கடன் விண்ணப்பங்கள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் கணக்கு மேலாண்மை செய்யப்படுகிறது.
பிசிக்கல் வங்கி சேவை என்றால் வங்கி கிளைகள், பொது சேவை மையங்கள் (Common Service Centres) மற்றும் களப் பணியாளர்கள் மூலம் மக்களுக்கு கடன் சேவை வழங்கப்படுகிறது.
இதுவே பைஜிட்டல் நிதி சேவை என்றால் ஒரு விவசாயி தனது ULI மொபைல் மூலம் கடன் விண்ணப்பித்தால், இதை அருகில் உள்ள ஏதேனும் ஒரு உள்ளூர் வங்கி அதை ஒப்புதல் செய்யலாம் (சிபில் ஸ்கோர், Account Aggregator தரவுகள் மூலம் ஒருவரின் நிதி நிலையை சரிப்பார்க்க முடியும்).
கடன் ஒப்புதல் பெற்ற உடன் இணையம் வாயிலாகவே பணத்தை டிரான்ஸ்பர் செய்யலாம், கடனை திருப்பி செலுத்துவதும் ஆன்லைன் வாயிலாகவே நடக்கும். இத்தகைய சேவை, வங்கி கிளைகள் இல்லாத அல்லது தொலை தூரத்தில் இருக்கும் பகுதி மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்கும்.
லடாக் போன்ற தொலைதூர பகுதிகளில் உள்ளவர்களும், சென்னை போன்ற நகரங்களில் உள்ளவர்களும் ஒரே மாதிரியான நிதி சேவைகளைப் பெறலாம்.
பின்டெக் நிறுவனங்களுக்கு அழைப்பு:
நிதியமைச்சர், "ஒவ்வொரு பின்டெக் நிறுவனமும் கிராமப்புற பகுதிகளை ஒரு புதிய சந்தையாக பார்க்க வேண்டும், ஏனெனில் அங்கு பொருளாதாரம், தனிநபர் வருமானம், டிமாண்ட் ஆகியவை வேகமாக மீண்டு வருகிறது" என்று கூறினார். கிராமப்புற இந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் தேவை, FMCG நிறுவனங்களுக்கு வெற்றியைத் தந்துள்ளது, இதே மாதிரியை பின்டெக் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கிராமப்புற பகுதிகளில் அதிகமாக இருக்கும் விசாயம், MSME நிறுவனங்கள், சுய உதவி குழுக்களுக்கு இத்தகைய கடன் சேவைகள் மூலம் உடனடியாக நிதி சேவையை பூர்த்தி செய்யப்படும். இது பெரும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. UPI போலவே ULI சேவையும் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications