இந்திய நுகர்வோர் சந்தையில் இருக்கும் சோப், டூத்பேஸ்ட், ரெடிமேட் உணவுகள், மசாலா பொருட்கள் உள்ளிட்ட 20 பிரிவுகளின் வர்த்தகம் 2020 அதாவது லாக்டவுன் காலத்தில் இருந்த வளர்ச்சியை 2021ஆம் ஆண்டில் பெற முடியாமல் தவித்து வருகிறது FMCG நிறுவனங்கள்.
ஏற்கனவே பல்வேறு மூலப்பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ள காரணத்தால் பல முறை விலையை உயர்த்தியுள்ள நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது, இது நுகர்வோர் சந்தையை அதிகளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே இன்று எப்எம்சிஜி நிறுவனப் பங்குகள் அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது.
2020 லாக்டவுன்
2020 லாக்டவுன் காலத்தில் மக்கள் அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே முடங்கியிருந்தனர். இதனால் நுகர்வோர் பொருட்களின் நுகர்வு அனைத்து பிரிவுகளிலும் அதிகரித்தது. குறிப்பாகச் சோப்பு போன்ற பாதுகாப்பு காரணங்களுக்காக வாங்கப்படும் பொருட்களின் விற்பனை பெரிய அளவில் அதிகரித்தது.
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
ஹோம், பர்சனல் மற்றும் உணவு போன்ற பிரிவுகளில் இருக்கும் பொருட்களின் விற்பனை வளர்ச்சி 2020ல் 20 சதவீதமாக இருந்தது, 2021ஆம் ஆண்டில் இந்த 14 பிரிவு வளர்ச்சி 6 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் மக்கள் மீண்டும் கொரோனாவுக்கு முந்தைய நுகர்வு அளவீட்டுக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
சோப்பு விற்பனை
இதில் முக்கியமாகக் கொரோனா தொற்று நிறைந்த காலகட்டத்தில் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் அதிகளவில் கைகளைக் கழுவும் காரணத்தால் சோப்பு விற்பனை யாரும் எதிர்பார்க்காத வகையில் 2020ல் சுமார் 13.5 சதவீதம் உயர்ந்தது. அனால் 2021ஆம் ஆண்டில் வெறும் 5.8 சதவீதம் இதுகிட்டதட்ட 2019 அளவீடாகும்.
முக்கியப் பொருட்கள்
மேலும் தரையைச் சுத்தம் செய்யும் க்ளீனர் விற்பனை 2020ல் 61 சதவீதமாக இருந்தது, 2021ல் வெறும் 4 சதவீதமாக உள்ளது. பால் பொருட்கள் விற்பனை 18.3 சதவீத வளர்ச்சியில் இருந்து 2021ல் 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் 2022ஆம் ஆண்டில் கொரோனாவுக்கு முந்தைய காலகட்ட அளவீடு அல்லது அதற்கும் குறைவான அளவீட்டைப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்குக் காரணம் விலைவாசி தான்.
ஜெப்ரீஸ் நிறுவனம்
இன்று ஜெப்ரீஸ் நிறுவனம் வெளியிட்ட நுகர்வோர் நிறுவன விலை பட்டியலில் முன்னணி நிறுவனங்களின் டார்கெட் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2900 இருந்து 2520 ரூபாய், ஐடிசி விலையில் மாற்றம் இல்லாமல் 305 ரூபாயாக அறிவித்துள்ளது. மேலும் காட்ரிஜ் 1190ல் இருந்து 970 ரூபாய், பிரிட்டானியா 18600ல் இருந்து 17200 ஆக அறிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications