இந்திய ரீடைல் சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள வேளையில் எப்எம்சிஜி துறை சார்ந்த டிஸ்ட்ரிபியூட்டர்-கள் வர்த்தகம் பெரிய அளவில் குறைந்தது மட்டும் அல்லாமல் வருமானமும் குறைந்துள்ளது. இதற்கு முதல் முக்கியக் காரணம் ஜியோமார்ட், பிக் பேஸ்க்ட், அமேசான், க்ரோபர்ஸ் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் தான்.
இந்தப் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்த நிலையில் இந்தியா முழுவதும் இருக்கும் டிஸ்ட்ரிபியூட்டர்-கள் இதற்குத் தீர்வு காணாத பட்சத்தில் பொருட்களின் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்தப்படும் என டிஸ்ட்ரிபியூட்டர் யூனியன் 20க்கும் அதிகமான FMCG நிறுவனங்களுக்குக் கடிதம் அனுப்பியது.
இந்நிலையில் FMCG நிறுவனங்கள் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
FMCG நிறுவனங்கள்
பேக் செய்யப்பட்ட மளிகை பொருட்கள் மற்றும் இதர நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இனி ஆன்லைன் விற்பனை தளத்திற்கு விற்பனைக்காக அளிக்கப்படும் பொருட்களை மாறுபட்ட எடை, விலை, பேக்கிங்-ல் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தத் தனிப் பேக்கிங் கொண்ட பொருட்களை மாறுபட்ட தள்ளுபடியுடனும் கொடுக்க முடிவு செய்துள்ளது FMCG நிறுவனங்கள்.
டிஸ்ட்ரிபியூட்டர்கள்
இந்த மாற்றத்தின் மூலம் புதிய வர்த்தக முறையின் கீழ் FMCG நிறுவனங்கள் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதன் அதிகப்படியான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்ட டிஸ்ட்ரிபியூட்டர்கள் நிலையான வர்த்தகம் மற்றும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ரீடைல் வர்த்தகச் சந்தை
இந்தியாவில் ரீடைல் வர்த்தகச் சந்தையைப் பிடிக்கப் பெரும் நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளது, சமீபத்தில் நுழைந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மெட்ரோ, உதான் போன்ற பல நிறுவனங்கள் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நேரடியாக உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து அதிகப்படியான தள்ளுபடி விலைக்கு வாங்கி விற்பனை கடைகளுக்கு நேரடியாக வழங்கி வருகிறது.
ரிலையன்ஸ், மெட்ரோ, உதான்
மேலும் விற்பனை கடைகளும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மெட்ரோ, உதான் போன்ற தளத்தில் டிஸ்ட்ரிபியூட்டர்களை விடவும் குறைவான விலைக்குப் பொருட்களைக் கொடுக்கும் காரணத்தால் அதிகளவில் ஆன்லைனில் புக் செய்து பொருட்களை வாங்கி வருகிறது.
டிஸ்ட்ரிபியூட்டர்கள் பிரச்சனை
பொதுவாக டிஸ்ட்ரிபியூட்டர்கள் வர்த்தக முறையில் பல செலவுகள் உள்ளது போக்குவரத்தில் துவங்கி, கிடங்கு, ஊழியர்களின் செலவு எனப் பல விஷயங்கள் அடங்கியுள்ளதால் உற்பத்தி நிறுவனங்கள் அதிகப்படியான தள்ளுபடியில் பொருட்களை வழங்குகிறது.
ஆன்லைன் விற்பனை
கூடுதலான தள்ளுபடி விலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் பொருட்களைப் பெறும் காரணத்தால் கடைக்காரர்கள் ஆன்லைன் தளத்திற்கு அதிகப்படியாகச் செல்கின்றனர், இதனால் டிஸ்ட்ரிபியூட்டர்கள் வர்த்தகம் மற்றும் நெட்வொர்க் பாதிக்கப்படுகிறது.
டிஸ்ட்ரிபியூட்டர்கள் அமைப்பு
இந்நிலையில் கடந்த வாரம் All India Consumer Products Distributors Federation அமைப்பு அனைத்து நுகர்வோர் நிறுவனங்களும் விலை குறைக்கக் கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், ரீடைல் கடைகளுக்குப் பொருட்களை டெலிவரி செய்வதையும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பொருட்களையும் சப்ளை செய்வதை நிறுத்திவிடுவோம் எனவும் 4,00,000 அதிகமாக உறுப்பினர்கள் கொண்ட இவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாகப் புதிய முடிவை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications