கோவை முழுவதும் இரு தினங்களுக்கு முன் அதிர்வலைகளை ஏற்படுத்திய அமெரிக்காவை சேர்ந்த Focus Edumatics என்ற ஐடி நிறுவனம் குறித்த செய்திகள் வெளியாகி அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியது. அந்த நிறுவனம் திடீரென இழுத்து முடியதால், அந்த நிறுவனத்தில் வேலைபார்த்தவர்களுக்கு கடுமையான நெருக்கடிஏற்பட்டது. இந்த ஃபோகஸ் எடுமாட்டிக்ஸ் நிறுவனம் என்பது என்ன? அது என்ன வேலைகளை செய்தது என்பதை பார்க்கலாம்
ஃபோகஸ் எடுமாட்டிக்ஸ் என்றால் என்ன?: கோவை ஆர்.எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதிகளில் ஃபோகஸ் எடுமாட்டிக்ஸ் என்ற தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வந்தது. அதில், அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு கோவையில் இருந்தபடியே ஆன்லைனில் கல்வி கற்பிக்கும் வகையில் தனியார் பயிற்சி மையம் ஃபோகஸ் எடுமாட்டிக்ஸ் என்ற தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வந்தது. இதில், உள்ளடக்கம், கியூ ட்ரீ, குவாலிட்டி, ப்ராஜெக்ட்ஸ் மேஜேனர்கள் உள்ளிட்ட அணிகளை கொண்டது.

எப்போது தொடங்கப்பட்டது?: 2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் கிளைகள், பெங்களூர் மற்றும் சென்னையிலும் உள்ளன.15 வருடங்களாக இயங்கி வரும் அந்த ஐடி நிறுவனத்தில் சுமார் இதில் சுமார் 2500 மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.
திடீரென என்ன ஆனது?: இந்த நிலையில், திடீரென கடந்த வெள்ளிக்கிழமை ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் மதியம் 12 மணி வரை ஐடி சர்வீஸ்க்காக shutdown செய்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் லீவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு கோவையில் உள்ள ஃபோக்கெஸ் எடுமாட்டிக்ஸ் நிறுவனக்கிளை நிரந்தரமாக மூடப்படுவதாக ஊழியர்களுக்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கோவையில் உள்ள எல்லா ஊழியர்களும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஊழியர்கள் போராட்டம்: இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஃபோக்கெஸ் எடுமாட்டிக்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஊழியர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பள தொகையை பெற்று தர வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கு செட்டில்மென்ட், கிராஜுவிட்டி உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தர வேண்டும் என்று அவர்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஃபோகஸ் எடுமாட்டிக்ஸ் என்ன சொல்கிறது?: இதற்கிடையில், நிறுவனம் தனது வெப்சைட்டில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி முதல் தனது செயல்பாடுகளை முற்றிலும் நிறுத்துவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏன் மூடப்படுகிறது என்ற காரணத்தை நிறுவனம் வெளியிடவில்லை.
தீர்வு என்ன?: இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த அரசு, தொழிலாளர் நலத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம், பணிக்கொடை ஆகியவற்ற வரும் 31ம் தேதிக்குள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications