ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் என அதன் பல்வேறு சாதனங்களின் புதுப்புது மாடல்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஆப்பிள் நீண்ட காலமாக அதே 4-மாடல் தயாரிப்பு வரிசையையே பயன்படுத்தி வருகிறதென்று விமர்சனங்கள் வருகின்றன. இந்தநிலையில், Apple தனது தயாரிப்பு வரிசையில் மாற்றம் செய்யலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. அதாவது, iPhone 17 தொடரில், iPhone 17 Air அறிமுகமாகலாம், இது Plus மாடலை மாற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் வடிவமைப்பைப் பின்பற்றி, அடுத்த ஆண்டிற்கான திட்டத்தையும் Apple நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.

அறிக்கையின்படி, Apple நிறுவனம் 2026ஆம் ஆண்டில் மடிக்கக்கூடிய iPhone-ஐ வெளியிட உள்ளதாக Bloomberg இணையதளத்தின் Mark Gurman உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், ஆப்பிளின் மடிக்கக்கூடிய சாதனம் கிளாம்ஷெல் (clamshell) வடிவமைப்புக்கு பதிலாக book-style வடிவமைப்பைப் பின்பற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மடிக்கக்கூடிய ஐபோன், iPhone 17 Air மாடல் மூலம் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இந்த மடிக்கக்கூடிய ஐபோன், Samsung Galaxy Z Fold போன்ற புக் ஸ்டைல் வடிவமைப்பைப் பெற்றிருக்கும் என்றும் ஆனால், இது ஃபிளிப்-ஸ்டைல்(flip)மடிப்பு வடிவமைப்பில் இருக்காது என்றும் இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிக மெல்லிய ஐபோன் 17 ஏரில் காணப்படும் அதே தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
iPhone 17 Air என்பது ஆப்பிள் இதுவரை உருவாக்கிய மிகவும் மெல்லிய ஐபோன் மாடலாக ஆக இருக்குமென கூறப்படுகிறது, இது 5.5mm தோற்றத்தைக் கொண்டிருக்கலாம். இதுதவிர, இந்த அதிக மெல்லிய வடிவமைப்பு, சில சலுகைகளை கொண்டிருக்கலாம் . குறிப்பாக ஸ்பீக்கர்கள் மற்றும் கேமரா திறன்களில். இருந்தாலும், இந்த சாதனம் இன்னும் மிகச்சிறந்த ஐபோன் அனுபவத்தைக் கொடுக்குமென கூறப்படுகிறது, மேலும் iPhone 16e போன்று சிறந்த பேட்டரி ஆயுளையு கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக, iPhone 17 Air என்பது ஒரு கான்செப்ட் நிரூபணமாக (proof of concept) செயல்பட்டு, உபகரணங்களை மிகச்சிறிய அளவில் உருவாக்கும் தொழில்நுட்பத்தின் எல்லைகளை விரிவுபடுத்தும். இது எதிர்கால மடிக்கக்கூடிய ஐபோனின் வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான படியாகும்.
மடிக்கக்கூடிய iPhone-ல் என்ன எதிர்பார்க்கலாம்? தகவல்களின்படி, வரவிருக்கும் மடிக்கக்கூடிய iPhone, முழுமையாகத் திறக்கப்படும்போது 7.8 இஞ்ச் திரை, 5.5 அங்குல வெளிப்புறத் திரையையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, ஆய்வாளர்கள் Ming-Chi Kuo மற்றும் Jeff Pu மற்றும் லீக்கர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் அறிக்கைகளின் கூற்றுப்படி, இப்போது முக்கியமான hardware முடிவுகள்(அதாவது, புக் ஸ்டைல் வடிவமைப்பு) இறுதி செய்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றன.
நீடித்த தன்மையை மேம்படுத்த, ஆப்பிள் தனது மடிக்கக்கூடிய ஐபோனின் மடிப்பு முகட்டுகளில் (hinges) லிக்விட் மெட்டல் (liquid metal) பயன்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இது முன்பு SIM எஜெக்டர் (SIM ejector) கருவிகள் போன்ற சிறிய கூறுகளில் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மைக்கு பெயர்பெற்ற லிக்விட் மெட்டல், திரை மடிப்பில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்க மற்றும் சாதனத்தின் நீடித்த தன்மையை மேம்படுத்த உதவக்கூடும். இது மடிக்கக்கூடிய கைப்பேசிகளுக்கான பொதுவான பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாக இருக்கும்.
இந்த மடிக்கக்கூடிய iPhone அதிகமான மெல்லிய வடிவமைப்பில் உருவாக்கப்படுகிறது. இதை திறக்கும்போது, 4.5mm மற்றும் மடிக்கும்போது 9 மிமீ முதல் 9.5 மிமீ வரை இருக்கும். இதன் மூலம், உலகின் மிக மெல்லிய மடிக்கக்கூடிய (foldable) ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இது இருக்கும். இந்த மெல்லிய வடிவமைப்பை அடைய, ஆப்பிள் இதுவரை பயன்படுத்தி வந்த Face ID-யை நீக்கி, அதற்கு பதிலாக Touch ID-வை பவர் பட்டனில் உட்பொதிக்க இருக்கலாம். இதனால், உள் அமைப்பில் அதிக இடத்தை உறுதி செய்து, சாதனத்தின் மெலிவான வடிவமைப்பை (slim profile) கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மேலும், டைட்டானியம் உட்பொதிக்கப்பட்ட வடிவமைப்பு, சாதனத்திற்கான அழகிய தோற்றத்தையும், மேம்பட்ட வலிமையையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Battery Life மேலும் கவனம் செலுத்தப்படும் முக்கிய அம்சமாகும்.ஆப்பிள் அதிக அடர்த்தி கொண்ட பேட்டரியைத் தேர்வுசெய்ததாகக் கூறப்படுகிறது, இருப்பினும் துல்லியமான விவரக்குறிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மடிக்கக்கூடிய ஐபோனின் விவரங்கள் குறைவாகவே இருந்தாலும், அதன் விலை சுமார் 2000 டாலர்கள் (சுமார் ரூ.1,71,885) ஆக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக குர்மன் கூறுகிறார். துவக்க கட்டத்தில் தயாரிப்பு மெதுவாக இருக்கக்கூடும், இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடைபெற்றால், மடிக்கக்கூடிய iPhone, iPhone 18 தொடரின் (lineup) ஒரு பகுதியாக அறிமுகமாகலாம் என்று அவர் மேலும் கூறினார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications