டிகே.சிவகுமார் உடன் சந்திப்பு.. அதானி நிறுவனத்திற்கு கிடைத்த ரூ.665 கோடி பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் திட்டம்

ஐடி நகரமான பெங்களூரில் Mallige Line எனப்படும் பென்னிகனஹள்ளி மற்றும் சிக்கபனவரா இடையேயான ரயில் வழித்தடத்தில் அமைக்கப்படும் 671.65 கோடி ரூபாய் மதிப்பிலான 7.8 கிமீ நீளம் கொண்ட டபுள் டெக்கர் மேம்பால திட்டத்தின் ஏலத்தை அதானி குழுமம் வென்றுள்ளது.

கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் கட்டுமான நிறுவனமான கெம்இந்தியா ப்ராஜெக்ட்ஸ் குறைப்பட்ச தொகையான 665.61 கோடிக்கு இத்திட்டத்தை முடிக்க விண்ணப்பம் கொடுத்துள்ள காரணத்தால் குறைந்தபட்ச ஏலதாரர் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

டிகே.சிவகுமார் உடன் சந்திப்பு.. அதானி நிறுவனத்திற்கு கிடைத்த ரூ.665 கோடி பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் திட்டம்

இந்த திட்டத்திற்கு அரசு நிறுவனமான Rail Vikas Nigam நிறுவனம் 759.05 கோடி ரூபாய் மதிப்பிற்கு விண்ணப்பம் செய்த காரணத்தால் இரண்டாவது குறைந்தபட்ச ஏலதாரர் என நிலையில் இத்திட்டத்தை இழந்துள்ளது.

இந்த 7.8 கிமீ நீளம் கொண்ட டபுள் டெக்கர் மேம்பால திட்டத்தின் முக்கிய அம்சமாக மதிகெரே - யஷ்வந்த்பூர் இடையே மோகன் குமார் சாலை பகுதியில் சுமார் 1.2 கிமீ நீளமான Double-Decker கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த டபுள் டெக்கர் ரயில் திட்டத்தில் தரை தளத்திலும், முதல் தளத்திலும் வாகனங்கள் செல்வதற்கான சாலை அமைக்கப்படும்.

Also Read

மேல் தளத்தில் ரயில்கள் செல்ல டபுள் லைன் அமைக்கப்படும். மேலும் இத்திட்டத்தில் வாகனங்கள் செல்வதற்கான ரேம்ப் அமைக்கப்பட உள்ளது, மதிகெரே பகுதியில் டபுள் டெக்கர் ரயில் நிலையமும் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு முன்பு அதானி குழுமம் பெங்களூருவின் சில்க் போர்டு மற்றும் ஹெப்பால் இடையிலான 16.75 கிமீ நீளம் கொண்ட சுரங்க சாலை திட்டத்தின் 2 பிரிவுகளிலும் குறைந்தப்பட்ச தொகையை கோரி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தான் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி கர்நாடக முதல்வர் டிகே.சிவகுமார்-ஐ அவரது சதாஷிவநகர் வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றவும் டிகே.சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூருவில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் அடுத்தடுத்து குறைந்தப்பட்ச விலையை விண்ணப்பம் செய்து வென்றுள்ளதால் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Recommended For You

இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமம் பல துறையில் இயங்கி வரும் வேளையில், சமீபத்தில் இந்நிறுவனம் கைப்பற்றிய ITD Cementation India நிறுவனம் மூலம் பல கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அதானி குழுமம் பெங்களூரில் மிக முக்கியமான டபுள் டெக்கர் ரயில் திட்டத்தை வென்றுள்ளது.

ஐடிடி சிமெண்டேஷன் ஒரு பிரிட்டன் நிறுவனமாக இருந்தாலும் 1931 முதல் பலரின் கைகளுக்கு மாறி ஒரு இத்தாலி - தாய்லாந்து நிறுவனமாக தான் அதானி குழுமத்தின் கைகளுக்கு வந்தது. EPC மற்றும் கட்டுமான நிறுவனமாக இருக்கும் ஐடிடி சிமெண்டேஷன் நிறுவனத்தில் சுமார் 67.46 சதவீத பங்குகளை Renew Exim DMCC நிறுவனத்தின் வாயிலாக அதானி குழுமம் கைப்பற்றி தற்போது இயங்கி வருகிறது.

அதானி குழுமம் கைப்பற்றிய பின்பு ஐடிடி சிமெண்டேஷன் நிறுவனத்தின் பெயரை கெம்இந்தியா ப்ராஜெக்ட்ஸ் என மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+