சென்னை: இந்தியாவில் அன்றாடம் கோடிக்கணக்கான மக்கள் தொலைதொடர்பு சேவைகளை பயன்படுத்துகின்றனர். அரசுக்கு சொந்தமான bsnl நிறுவனம் தொலைதொடர்பு சேவைகளை வழங்கினாலும் இந்திய தொலைதொடர்பு சேவையில் முன்னணியில் இருப்பது தனியார் நிறுவனங்கள்தான்.
ஜியோ, ஏர்டெல் ஆதிக்கம்: முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதல் இடத்திலும் ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்கள் தொடர்பாக எடுக்கக்கூடிய எந்த ஒரு முடிவும் கோடிக்கணக்கான மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு திடீரென இந்த நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 20% வரை உயர்த்தின.

தந்திரமான முடிவு: இந்நிலையில் இந்த ஆண்டும் தங்களின் வேலையை காட்ட தொடங்கிவிட்டன. இந்த முறை இந்நிறுவனங்கள் தந்திரமாக நம் பணத்தை பறிக்க திட்டமிட்டுள்ளன. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு பிளான் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டத்தை திடீரென நிறுத்தியது.
ஜியோ அறிவிப்பு: ஜியோ நிறுவனம் 22 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 209 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வந்தது இதில் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி மொபைல் டேட்டாவை பெறுவார்கள். அதே போல 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 249 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இந்த திட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி மொபைல் டேட்டா கிடைக்கும். ஜியோ நிறுவனம் வழங்கிய டேட்டா உடன் கூடிய பேஸிக் ரீசார்ஜ் திட்டம் இது. இந்த திட்டங்கள் தான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
தினசரி 1ஜிபி டேட்டா திட்டம் இல்லை: எனவே ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இனி தினசரி 1ஜிபி டேட்டா வழங்கும் பேஸிக் திட்டம் கிடைக்காது. வாடிக்கையாளர்கள் 299 ரூபாய்க்கு தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.எனவே அவர்கள் கூடுதலாக 50 ரூபாயை ரீசார்ஜிற்கு செலுத்த வேண்டி இருக்கும்.

ஏர்டெல்லும் அறிவிப்பு: ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தங்களுடைய 249 ரூபாய் மதிப்பிலான ப்ரீபெய்டு பிளான் திட்டத்தை நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தி இருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏர்டெல் வழங்கிய குறைந்தபட்ச பேஸிக் ரீசார்ஜ் திட்டம் தான் 249 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் திட்டம். 24 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். தற்போது இந்த திட்டத்தை ஏர்டெல் நிறுத்தி இருக்கிறது.
இனி கூடுதல் செலவு: எனவே மக்கள் இதற்கு மாற்றாக 299 ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் தான் ரீசார்ஜ் செய்ய முடியும். இதில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் வசதி கிடைக்கிறது. இல்லை எனில் 219 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம் அதில் 28 நாட்கள் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் மொத்தமாக 3ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இனி வேறு வழியில்லாமல் கூடுதலாக 50 ரூபாய் செலுத்தி 299 ரூபாய் திட்டத்தில் தான் ரீசார்ஜ் செய்வார்கள்.
கூடுதல் கட்டணம் செலுத்தும் கட்டாயம்:ஜியோவின் நடவடிக்கையை தொடர்ந்து தான் ஏர்டெல் இந்த நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் தற்போது கூடுதல் கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் நேரடியாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தால் தங்கள் வருவாயை பெருக்க மறைமுகமாக பேஸிக் திட்டத்தை நீக்கி வேறு வழியில்லாமல் மக்களை கூடுதல் கட்டணத்தை ரீசார்ஜ் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளி இருக்கின்றன.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications