இன்றைய காலகட்டத்தில் படித்த படிப்புக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. நாட்டில் வேலையின்மை பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகள் ஆண்டுதோறும் பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கொண்டிருப்பதாக பறைசாற்றுகின்றனர், பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் யதார்த்த நிலையோ அதற்கு தலைகீழாக உள்ளது. பட்டம் படித்தவர்களுக்கு வேலையில்லை. படித்த படிப்புக்கும் செய்யும் தொழிலுக்கும் சம்பந்தமே இருக்காது. பொறியியல் படித்த பட்டதாரிகளின் நிலைமையோ அய்யோ பாவம் எனப் பரிதாபப்பட வைக்கிறது.

படித்தது பொறியியல் ஆனால் கிடைப்பதோ சிறு சிறு வேலை, பியூனாகக் கூட வேலை செய்கின்றனர். சாப்ட்வேர் பொறியாளர்கள் மலிந்துவிட்டனர்
கல்லூரியில் படிக்கும்போது வரும் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைப்பவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் வேலை தேடி அலைய வேண்டிய நிலை தான் இன்றைக்கு இந்தியாவில் தாண்டவமாடுகிறது.
இன்றைக்கு உணவு டெலிவரி சந்தை சக்கைப்போடு போடுகிறது. சோமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் இதில் நல்ல லாபத்தைக் கொழிக்கின்றன. இவர்களது உணவு டெலிவரித் தொழிலுக்கு மூலதனம் ஊழியர்கள் பலம் தான்.
உணவை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சென்று டெலிவரி செய்வதற்கு பட்டக் கல்வியறிவு தேவையில்லை. ஆன்லைனிலேயே உணவுக்கான பணத்தைச் செலுத்திவிடுவதால் சில்லறை சண்டை இருக்காது.
இந்த நிலையில் தாராளமான வேலைவாய்ப்பின் காரணமாக உணவு டெலிவரி பாய்களாக பட்டதாரிகள் பலர் வேலை செய்கின்றனர்.
உணவு டெலிவரி பாய்களில் மூன்றில் ஒருவர் பட்டதாரி என்று தேசிய கவுன்சில் ஆப் அப்ளைடு எக்கனாமிக்ஸ் ரிசர்ச் நிறுவனம் செய்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. .
924 உணவு டெலிவரி தொழிலாளர்களிடம் செய்த ஆய்வில் அவர்கள் தங்கள் படிப்புத் தகுதிக்குக் குறைந்த இந்த வேலையைச் செய்கின்றனர் என அறியப்பட்டுள்ளது. குறிப்பாக சிறு நகரங்களில் 39.7 சதவீதம் பேர் பட்டதாரிகள். இதில் டெக்னிக்கல் மற்றும் வொக்கேஷனல் டிகிரி அல்லது டிப்ளமா படித்தவர்கள் 12.5 சதவீதம் பேர் உள்ளனர்.
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி உணவு டெலிவரி தொழிலில் 7,00,000 முதல் 10 லட்சம் பேர் வரை சோமேட்டோ மற்றும் ஸ்விக்கியில் வேலை செய்கின்றனர். இந்த எண்ணிக்கை சீசனைப் பொறுத்து அதிகரிக்கும்.
இதுபற்றி தேசிய கவுன்சில் ஆப் அப்ளைடு எக்கனாமிக்ஸ் ரிசர்ச் நிறுவன பேராசிரியர் போர்னாலி பண்டாரி கூறுகையில், அவர்கள் அதிகம் படித்துள்ளனர். உணவு டெலிவரி வேலை கிடைப்பதற்கு முன்பு பல கஷ்டமான வேலைகள் அவர்கள் செய்துள்ளனர்.
டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் காசாளர்கள், டிரைவர்கள், பிசினஸ், அக்கவுன்டன்ட்கள், சமையல் செய்வர்கள் என எல்லாவித வேலையும் செய்துள்ளனர். ஒருவர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் ஒன்றின் தலைவராகவும் வேலை பார்த்துள்ளார் என்றார்.
இந்தத் தொழிலாளர்கள் மாதம் ரூ.20744 சம்பாதிக்கின்றனர். அதேவேளையில் அவர்களது சக நண்பர்கள் மாதம் ரூ.22,494 சம்பாதிக்கின்றனர். காலத்துக்கு ஏற்ற வேலையை செய்கின்றனர்.
குறைந்தபட்சம் பள்ளி உயர்கல்வியை முடித்தவர்கள் 18-35 வயதுக்குட்பட்டவர்கள் இருக்கின்றனர். படிப்புக்கு ஏற்றதைவிட அவர்கள் 23 சதவீதம் அதிகமாக உழைக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் உணவு டெலிவரி தொழிலாளர்களின் சம்பளம் 11 சதவீதம் குறைந்து மாதம் வெறும் ரூ.11,963 தான் வாங்குகின்றனர். இதற்குக் காரணம் பெட்ரோல் விலையேற்றம் மற்றும் பணவீக்கம். உண்மையான சம்பளம் பணவீக்கத்தைக் கழித்தபின் தான் தெரியும். இதுதான் அவர்களது உண்மையான கூலியாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications