சென்னை: வங்கியில் கடன் வாங்கிய அனைவரும் எப்படா ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் இப்படியொரு செய்தி வந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகில் பல நாடுகள் தங்களது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைக்க முயற்சி செய்து வரும் வேளையில், ஆர்பிஐ விரைவில் ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது, ஆனால் இது அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக விலைவாசி உயர்வு 4 சதவீதத்திற்குக் கீழே வந்திருந்தாலும், இந்த நிதியாண்டில் வட்டி விகிதத்தைக் குறைக்க மத்திய வங்கி தயாராக இல்லை என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ரெப்போ விகிதம் நிர்ணயம் செய்வதில் நாட்டின் பணவீக்கமும், பணப்புழக்கமும் முக்கிய பங்கீட்டை வகிக்கிறது.

பொருளாதார வல்லுநர்கள் இதுகுறித்து கூறுகையில் ஜூலை மாதம் பணவீக்கம் குறைந்திருப்பது தற்காலிகமானது என்றும், இந்த பணிநீக்க சரிவு என்பது பேஸ் எபக்ட் வாயிலாக உருவானது என்றும், அதாவது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் தற்போது குறைந்துள்ளது. ஆனால் உண்மையில் விலைவாசி பெரிய அளவில் குறையவில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மத்திய வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், வட்டி விகிதம் குறித்த முடிவு உணவுப் பொருட்களின் விலை நிலவரத்தைப் பொறுத்தது என்றும், விலைவாசி உயர்வு அழுத்தத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே ஆர்பிஐ தனது ரெப்போ விகித குறைப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கலாம் எனப் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்த காலாண்டில் விலைவாசி உயர்வு 4.4 சதவீதமாகவும், அடுத்த காலாண்டில் 4.7 சதவீதமாகவும் இருக்கும் என்று ரிசர்வ் தனது நாணய கொள்கை முடிவில் கணித்துள்ளது.
இதுக்குறித்து மோதிலால் ஒஸ்வால் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் நிகில் குப்தா கூறுகையில் "தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்க குறைப்பு என்பது தற்காலிகமானது. செப்டம்பர் மாதத்திற்குள் மீண்டும் 5 சதவீதத்தை எட்டும். இதனால் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. 2025-ஆம் ஆண்டில் தான் வட்டி விகிதம் குறையும்" என்று தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம். நுகர்வோர் பணவீக்க குறியீட்டில் உணவுப் பொருட்களின் பங்கீடு மட்டும் சுமார் 46 சதவீதம். மே மாதம் மற்றும் ஜூன் மாதத்தில் விலைவாசி உயர்வில் 75 சதவீதம் உணவுப் பொருட்களின் பங்களிப்பு செய்துள்ளது. ஜூலை மாதத்தில் காய்கறிகள் பணவீக்கம் 6.83 சதவீதமும், பருப்பு வகைகளின் பணவீக்கம் 14.77 சதவீதமும் உயர்ந்துள்ளன.
எனவே ரெப்போ விகிதம் குறைப்பு 2025 ஏப்ரல் மாதத்தில் தான் நடக்கும் என திட்டவட்டமாகத் தெரிகிறது. இதனால் ஹோம் லோன், கார் லோன் வாங்கியவர்களுக்கு ஈஎம்ஐ தொகையில் எவ்விதமான மாற்றமும் வரப்போவது இல்லை, எனவே ஆர்பிஐ ரெப்போ விகித குறைப்பிற்காகக் காத்திருக்காமல் அசல் தொகையைக் குறைத்து, ஈஎம்ஐ தொகையைக் குறைக்கலாம்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications