பெங்களூரு: இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் வாராந்திர ஃபுட் ஸ்ட்ரீட்ஸ் நடத்தப்படும் என மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது உணவு விற்பனையாளர்கள் மற்றும் உணவு விற்பனையாளர் சங்கங்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23ஆம் தேதி அன்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 100 வாராந்திர ஹாத் அல்லது புட் ஸ்ட்ரீட் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

ஏற்கனவே சென்னையில் கோரா புட் ஸ்ட்ரீட் முதல் பல பகுதிகளில் மாலையில் துவங்கி விடியர்காலை வரையில் உணவு பிரியர்கள் மாஸ் செய்து வரும் வேளையில், மத்திய பட்ஜெட்டின் இந்த அறிவிப்பு எந்த அளவுக்கு சென்னைக்கு பலன் அளிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருக்கு இந்த அறிவிப்பு பெரிய அளவில் பலன் அளிக்கும் என கூறுகின்றனர்.
இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள கர்நாடக மாநிலத்தின் சிக்பேட் தொகுதி எம்எல்ஏவான பாஜகவை சேர்ந்த உதய் கருடாச்சர் இது ஒரு அற்புதமான முயற்சி என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாம் விவி ஸ்ட்ரீட் என்ற ஒரு மாடலை கொண்டு உணவு திருவிழா போன்றவற்றை நடத்தி வருகிறோம். தற்போது அரசின் இந்த அறிவிப்பின் மூலம் அதிக எண்ணிக்கையில் ஃபுட் ஸ்ட்ரீட்கள் நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். சாதாரண உணவு விற்பனையாளர்கள் இவற்றில் கலந்துகொண்டு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் எனக் கூறிய அவர் இது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் என்றார்.
ஃபுட் ஸ்ட்ரீட்கள் உற்சாகமான சூழ்நிலையை வழங்குவதால் மக்கள் இங்கே வருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர் என கூறிய அவர், அற்புதமான உணவை உட்கொள்வதற்கும் இது மக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு ஏற்படுத்தி தரும் என அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இதுபோன்ற புட் ஸ்ட்ரீட்களில் சில்லறை விற்பனையாளர்கள் அல்லது பொதுமக்களை ரவுடிகள் துன்புறுத்துவதை காவல்துறையினர் தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
விவி புரம் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவரான சூரிய வர்தன் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இது போன்ற உணவு திருவிழாக்கள் நடத்துவது மிகவும் அற்புதமானது எனக் கூறியுள்ளார். நகரின் பிற பகுதிகளில் இது போன்ற ஃபுட் ஸ்ட்ரீட்களை நடத்தி அனைவரும் பாதுகாப்பாக சென்று வரக்கூடிய வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஃபுட் ஸ்ட்ரீட்களில் யார் கடைகளை அமைக்க வேண்டும், அந்த கடைகளில் வழங்கப்படும் உணவுகளின் தரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து முறையான வழிகாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என ப்ரூஹத் பெங்களூரு ஹோட்டல் கூட்டமைப்பின் தலைவர் பி.சி. ராவ் கருத்து தெரிவித்துள்ளார். வழக்கமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் பயன்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications