கொரோனா வைரஸ் வந்ததால் என்ன தான் நல்லது நடந்து இருக்கிறது..? என்று கேட்டால் கச்சா எண்ணெய் விலை தாறு மாறாக சரிந்து இருப்பதைச் சொல்லலாம்.
ஆனால் இந்த விலை சரிவை, இந்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி, தங்கள் இஷ்டத்துக்கு வரிகளை அதிகரித்து மக்களுக்குச் சேர விடவில்லை.
இப்போது ஒரு கேள்வி. நாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் செலுத்தும் பணத்தில் எவ்வளவு ரூபாய் வரியாகப் போகிறது..? முதலில் பெட்ரோல் டீசல் வரி அதிகரிப்பில் இருந்து தொடங்குவோம்.
வரி அதிகரிப்பு
மத்திய அரசு, ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 10 ரூபாய் கலால் வரியை அதிகரித்து இருக்கிறது. ஒரு லிட்டர் டீசல் மீது 13 ரூபாய் கலால் வரியை அதிகரித்து எல்லோரையும் கலங்கடித்து இருக்கிறது. இந்த புதிய வரி உயர்வால் மட்டும் அரசுக்கு சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய் வசூலாகும் என்கிறார்கள். இதனால், கச்சா எண்ணெய் விலைச் சரிவு பெரிதாக மக்களைச் சென்று அடையாது.
டெல்லி
இந்தியா முழுமைக்கு பெட்ரோல் டீசலை விலையை கணக்கில் எடுத்துக் கொள்வது சிரமம். எனவே, தலைநகரான டெல்லியின் விலையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமாராக 71.26 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 69.39 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இந்த தொகையில் எவ்வளவு ரூபாய் வரியாக மட்டுமே செல்கிறது எனக் கணக்கிட்டுப் பார்ப்போம்.
எவ்வளவு வரி
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை = 17.96 ரூபாய்
போக்குவரத்து செலவுகள் = 0.32 ரூபாய்
எல்லா வகையான கலால் வரி (Excie Duty) = 32.98 ரூபாய்
டீலர் கமிஷன் = 3.56 ரூபாய்
வாட் வரி (டீலர் கமிஷனுக்கும் சேர்த்து) = 16.44
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை = 71.26 ரூபாய்
விளக்கம்
ஆக 18.28 ரூபாய் + 3.56 ரூபாய் டீலர் கமிஷனுக்கு வர வேண்டிய ஒரு லிட்டர் பெட்ரோல், தற்போது கலால் வரி 32.98 + வாட் வரி 16.44 ரூபாய் செலுத்துகிறோம். ஆக 18.28 ரூபாய் பெட்ரோலுக்கு 49.42 ரூபாய் வரி செலுத்துகிறோம். இது சுமாராக 270 % வரி என்பது கவனிக்கத்தக்கது. ஒட்டு மொத்தமாக 71.26 ரூபாயில் சுமாராக 69.35 % பணத்தை வரியாக மட்டுமே செலுத்திக் கொண்டு இருக்கிறோம்.
டீசல் நிலவரம்
ஒரு லிட்டர் டீசல் விலை = 18.49 ரூபாய்
போக்குவரத்து செலவுகள் = 0.29 ரூபாய்
எல்லா வகையான கலால் வரி (Excie Duty) = 31.83 ரூபாய்
டீலர் கமிஷன் = 2.52 ரூபாய்
வாட் வரி (டீலர் கமிஷனுக்கும் சேர்த்து) = 16.26
டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை = 69.39 ரூபாய்
விலை விளக்கம்
ஆக 18.78 ரூபாய் + 2.52 ரூபாய் டீலர் கமிஷனுக்கு வர வேண்டிய ஒரு லிட்டர் டீசல், தற்போது கலால் வரி 31.83 + வாட் வரி 16.26 ரூபாய் செலுத்துகிறோம். ஆக 18.78 ரூபாய் டீசலுக்கு 48.09 ரூபாய் வரி செலுத்துகிறோம். இது சுமாராக 256 % வரி என்பது கவனிக்கத்தக்கது. ஒட்டு மொத்தமாக 69.39 ரூபாயில் சுமாராக 69.30 % பணத்தை வரியாக மட்டுமே செலுத்திக் கொண்டு இருக்கிறோம்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications