Zomato தலைமை பணியாளர் பணிக்கு 18,000 பேர் ஆர்வம்.. 20 லட்சம் கட்ட வேண்டாமாம்..!

இந்தியாவின் புகழ்பெற்ற உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ (Zomato)இல் தலைமை பணியாளர் (Chief of staff) பதவிக்கு 18,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரியான தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக சோமேட்டோ செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக தீபிந்தர் கோயல் இயங்கி வருகிறார். இவர் அண்மையில் தன்னுடைய நிறுவனத்தின் தலைமை பணியாளர் பதவிக்கு ஆள் தேவைப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

Zomato தலைமை பணியாளர் பணிக்கு 18,000 பேர் ஆர்வம்.. 20 லட்சம் கட்ட வேண்டாமாம்..!

இந்த வேலையில் சேர விரும்புவோருக்கு முதல் ஆண்டில் சம்பளம் கிடையாது என்றும் இந்த வேலையில் அமர்த்தப்படும் நபர் 20 லட்சம் ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் தன்னுடைய அறிவிப்பில் அவர் கூறியிருந்தார்.

சிறந்த குணம் கொண்ட தலைமை பணியாளரை தான் தேடுவதாகவும் முழு ஈடுபாட்டுடனும் முழு பங்களிப்புடனும் வேலையை செய்பவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என தீபிந்தர் கோயல் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார். இவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு முதல் ஆண்டில் ஊதியம் கிடையாது என்றும் 20 லட்சம் ரூபாயை அவர் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இரண்டாம் ஆண்டு முதல் இந்த பணியில் இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் கிடைக்கும் என அவர் கூறி இருந்தார்.

அவருடைய இந்த பதிவை தொடர்ந்து ஏராளமானவர்கள் இந்த வேலைக்காக விண்ணப்பம் செய்திருக்கிறார்களாம். தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ள தகவலின் படி தற்போது இந்த பணிக்கான விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதுவரை 18 ஆயிரம் பேர் இந்த பணிக்காக விண்ணப்பம் செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்களை சரிபார்த்து அடுத்த வாரத்தில் பொருத்தமான நபரை தேர்வு செய்யும் பணி நடைபெறும் எனக் கூறியுள்ளார்.

புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் மனநிலையைக் கொண்ட நபரை தேர்வு செய்து பணிக்கு அமர்ந்திருப்பதாக அவர் கூறியுள்ளார் .வாழ்க்கையில் இது போன்ற வாய்ப்புகள் ஒரு முறை தான் வரும் என சுட்டிக்காட்டி உள்ள தீபந்தர் கோயல் தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் இந்த வாய்ப்பு மிகப்பெரியது என தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் 200 வார்த்தைகள் கொண்ட கவர் லெட்டரை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இவற்றை எல்லாம் படித்து மதிப்பாய்வு செய்து பொருத்தமான நபர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

முன்னதாக 20 லட்சம் ரூபாய் செலுத்தி வேலை செய்ய வேண்டும் ஓராண்டுக்கு சம்பளம் கிடையாது என்ற இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை பலரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இது விளம்பரத்திற்காக அவர் செய்யும் செயல் என கூறியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+