பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்காக நாம் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இஸ்ரோ மீண்டும் நமக்கு 2.50 ரூபாயாக திருப்பித் தருகிறது என்பது தெரிய வந்துள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இஸ்ரோ தலைவரான சோம்நாத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கர்நாடக அரசு சார்பாக மாணவர்களுக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு இடையிலான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சோம்நாத் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது மற்ற நாடுகளின் விண்வெளி திட்டங்களோடு போட்டி போடுவது இல்லை இஸ்ரோவின் நோக்கம், நாட்டுக்காக சேவையாற்றுவதுதான் இஸ்ரோவின் பிரதான நோக்கம் என தெரிவித்தார். எனவே இஸ்ரோவின் திட்டங்கள் அனைத்துமே மக்களுக்கானவை என்றார்.
இஸ்ரோவின் பெரும்பாலான திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்களாகவே இருக்கின்றன என குறிப்பிட்ட அவர், செயற்கைகோள்கள் மூலம் வானிலை அறிவிப்புகள் வெளியிடுவதை உதாரணமாக கூறினார்.
மீனவர்களுக்கு வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகள் உள்ளிட்ட தகவல்களையும் அவர் குறிப்பிட்டார். விண்வெளி திட்டங்களை செயல்படுத்த ஒரு சுதந்திரம் தேவை அந்த சுதந்திரத்தை விண்வெளி தொழில்நுட்பங்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமே எட்ட முடியும் என்றார்.
நிலவிற்கு சென்று ஆய்வு செய்வதற்கு நாம் மிகப்பெரிய தொகையை செலவிட்டாக வேண்டும். இதற்காக நாம் அரசாங்கத்தை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. இந்த துறையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் அவ்வாறு உருவாக்கும்போது திட்டங்களுக்கான நிதியை எளிதாக திரட்ட முடியும் எனக் கூறியுள்ளார்.
இஸ்ரோ தலைவராக உயர்ந்ததற்கு யார் காரணம் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தன்னுடைய ஆசிரியர்களே தனக்கு மிகச்சிறந்த வழிகாட்டிகளாக இருந்தனர் என கூறினார். குறிப்பாக தன்னுடைய இயற்பியல் ஆசிரியர் ராஜப்பா மற்றும் கணக்கு ஆசிரியர் பால் ஆகிய இருவரும் தனக்கு மிகச்சிறந்த முறையில் பாடங்களை கற்பித்து தந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய பத்தாம் வகுப்பு ஆசிரியர் மறைந்த பாகிரதியம்மா தான் தனக்கு முதன் முதலில் ஐஐடி குறித்தும் நீ ஒரு நாள் மிகப்பெரிய பொறியாளராக உருவெடுப்பாய் என்றும் கூறியதாக தெரிவித்தார்.
1990களில் தன்னுடைய முதல் திட்டமான பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் தொடக்கத்தில் தோல்வி அடைந்ததை குறிப்பிட்டு பேசிய சோம்நாத், இதற்கு அடுத்து பத்து மாதங்கள் தானும் தன்னுடைய குழுவினரும் கடுமையாக உழைத்ததாகவும், பின்னர் பிஎஸ்எல்வி ராக்கட்டை வெற்றிகரமாக ஏவியதாகும் அவர் தெரிவித்தார். இந்த தோல்வி தனக்கு பல்வேறு பாடங்களை கற்றுத் தந்தது என்றும் பின்னாளில் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு இது காரணமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications