மொராக்கோ: முதன்முறையாக இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் வெளிநாட்டில் ராணுவத்திற்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் ஆலையை அமைக்க இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு துறை உற்பத்தி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதன்படி டாடா குழுமத்துக்கு சொந்தமான Tata Advanced Systems Ltd (TASL) நிறுவனம் மொரோக்கோ நாட்டின் காசாபிளாங்கா பகுதியில் பாதுகாப்பு துறை உபகரணங்களை தயாரிக்கும் ஆலையை நிறுவ இருக்கிறது.
இதன் மூலம் முதன்முறையாக இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் வெளிநாட்டில் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட ஆலையை அமைக்க இருக்கிறது. இந்த ஆலையில் மொரோக்கோ ராணுவத்திற்கு தேவையான Wheeled Armoured Platforms எனப்படும் போர் வாகனங்கள் தயாரித்து வழங்கப்பட உள்ளன.

மொராக்கோ பாதுகாப்பு படையினரை தொடர்ந்து டாடா நிறுவனம் ஆப்பிரிக்காவை சேர்ந்த பல்வேறு நாடுகளுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறது. இதன் மூலம் வளர்ந்து வரக்கூடிய ஆப்பிரிக்கா பாதுகாப்புத்துறை சந்தையில் டாடா கால் பதித்துள்ளது.
அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் எளிதாக வீரர்கள் பயணம் செய்து எதிரணியினரை தாக்கும் வசதிகள் கொண்ட ஒரு போர் வாகனமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு ஓராண்டுக்கு 100 போர் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இந்த ஆலை இருக்கும் என்றும் ஓராண்டுக்குள் இது செயல்பாட்டுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த போர் வாகனங்கள் இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன இவை லடாக் எல்லையில் தற்போது நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த போர் வாகனம் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் டாடா நிறுவனங்கள் இணைந்து தயாரித்தவை என தெரிவித்துள்ள டாடா நிறுவனத்தின் சுகாரன் சிங் இதன் மூலம் ஆப்பிரிக்க சந்தையில் கால் பதிக்கும் ஒரு வாய்ப்பு டாடா நிறுவனத்திற்கு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த போர் வாகனம் ஆப்பிரிக்க நாட்டு பாலைவனங்களில் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு உற்பத்திக்கான அனுமதி பெற்றது என்றும் கூறியுள்ளார்.
இந்த ஆலையில் சுமார் 350 பேர் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என சொல்லப்படுகிறது .ஆப்பிரிக்க நாடுகளை பொறுத்தவரை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளிடமிருந்து பெருமளவிலான பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட உபகரணங்களை வாங்குகின்றன. இதற்கு முன்பு ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தான் இவற்றுக்கு பாதுகாப்பு துறைக்கான பொருட்களைவிற்பனை செய்து வந்தன. ஆனால் தற்போது சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இதில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன.
இந்தியா தற்போது சொந்த நாட்டுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்வதில் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications