சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட கடந்த பத்து ஆண்டுகளில் முதன்முறையாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தங்களுடைய ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முதன்முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த அறிவிப்பின் மூலம் நான்-எக்ஸிக்யூட்டிவ் பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் தீபாவளி போனஸ் கிடைக்கும். முன்னதாக மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியு மற்றும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கம் சார்பாக முதலமைச்சர் மு. க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
வரும் 31ஆம் தேதி அதாவது நாளை மறுதினம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தான் சர்ப்ரைஸாக போனஸ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.
இது சிஎம்ஆர்எல் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 2023- 24 ஆம் நிதியாண்டில் குறைந்தது ஆறு மாதங்களாவது பணி செய்திருக்கும் நான் - எக்ஸிக்யூட்டிவ் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த தீபாவளி போனஸ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் முழுமையாக வேலை செய்தவர்களுக்கும் பகுதி அளவு வேலை செய்தவர்களுக்கும் அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ற அடிப்படையில் போனஸ் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த 2023 ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் 31 வரையிலான காலத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் முழுமையாக வேலை செய்தவர்கள் அதாவது ஆறு மாதங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு ரூ.15,000 முழுமையான போனஸ் தொகை கிடைக்கும்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் எனப்படும் சிஎம்ஆர்எல் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு நிறுவனமாகும். சென்னையில் மெட்ரோ ரயில்களை நிறுவுவது மற்றும் இயக்குவது இந்த அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. 2007 ஆம் ஆண்டில் தான் சென்னையில் சிஎம்ஆர்எல் நிறுவப்பட்டது. 2015ஆம் ஆண்டு முதல் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக கமர்சியல் ரீதியிலான மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன.
சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்ட கட்டுமான பணிகள் 2019ஆம் ஆண்டில் நிறைவடைந்து விட்டன. தற்போது சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சார்பாக இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்ற வருகின்றன. 2022 - 23 ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 486.55 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications