எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் சாதனை.. சீனாவுக்கே ஏற்றுமதி செய்யும் இந்தியா..!!

டெல்லி: எப்போதும் ஐபோன்களுக்கான உபகரணங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்த இந்தியா முதன்முறையாக அவற்றை சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் தான் இதனை சாத்தியமாக்கி உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு மின்னணு சாதனங்களுக்கான உபகரணங்களுக்கு இந்தியா பெரும்பாலும் சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை தான் சார்ந்திருந்தது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐமேக் உள்ளிட்டவற்றை தயாரிக்க தேவையான மின்னணு சாதனங்கள் சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தான் பயன்படுத்தப்பட்டு வந்தன.

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் சாதனை.. சீனாவுக்கே ஏற்றுமதி செய்யும் இந்தியா..!!

ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களுடைய பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய தொடங்கிவிட்டன. அந்த வகையில் மதர் சன் குழுமம், ஜபில், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ,வாட்ச் , மேக் புக் உள்ளிட்டவற்றுக்கு தேவையான முக்கிய உபகரணங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்கின்றன.

தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய இந்த உபகரணங்கள் சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருக்கக்கூடிய ஐபோன் ஒருங்கிணைப்பு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு போன்களாக தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் மின்னணு சாதனங்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியா மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் பெரிய அளவு வளர்ச்சி அடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்வது மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களுக்கான உபகரணங்களை இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்யவும் தொடங்கியிருப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. 2031 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்னணு சாதனங்கள் உற்பத்தி 35 லிருந்து 40 பில்லியன் டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மின்னணு சாதனங்களுக்கான உபகரணங்களை உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசு 3 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்து உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தின் கீழ் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாகவே மின்னணு சாதனங்களில் மதர் போர்டு ,சிபியூ உள்ளிட்டவை மிகவும் முக்கியமான உபகரணங்களாக இருக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்வதற்கு உயர் தொழில்நுட்பங்களும் அதற்கேற்ற நிபுணர்களும் அவசியம.

தற்போது அந்த துறையில் கால் பதித்து வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை இந்தியாவில் தங்களுடைய பொருட்களை உற்பத்தி செய்வதை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் ஐபோன்கள் பெரும்பாலும் இந்தியாவிலேயே தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+