உலக அளவில் ஜெனரேட்டிவ் ஏஐ செயலிகளில் பயன்பாட்டில் முதலிடத்தில் இருக்கிறது சாட் ஜிபிடி. ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தை பெரும்பாலான மக்களிடம் தொடக்கத்திலேயே கொண்டு சேர்த்த பெருமை சாட்ஜிபிடி-ஐ சாரும்.
சாட் ஜிபிடி வெளியான பின்னர் தான் கூகுளின் ஜெமினி ஏஐ, எக்ஸ்-இன் கிராக், பேஸ்புக்கின் மெட்டா ஏஐ உள்ளிட்ட பல்வேறு ஏஐ செயலிகள் பயன்பாட்டுக்கு வந்தன. உலகம் முழுவதும் தற்போது அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு ஏஐ சாட்பாட்டாக சாட் ஜிபிடி தொடர்ந்து தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது . நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் இந்த செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர்.

சாட் ஜிபிடியும் அப்டேட் செய்து அடுத்தடுத்த மாடல்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் சாட் ஜிபிடியை மக்கள் எதற்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலை ஓபன் ஏஐ நிறுவனமே வெளியிட்டுள்ளது. 1.5 மில்லியன் பயனர்களின் கலந்துரையாடலை ஆய்வு செய்ததில் சாட் ஜிபிடியை மக்கள் எப்படி எதற்காக அணுகுகிறார்கள் என்பதை விவரமாக வெளியிட்டுள்ளது.
மூன்று விஷயங்களுக்கு தான் மக்கள் சாட் ஜிபிடியை பயன்படுத்துவதாக ஓபன் ஏஐ நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஒன்று கேள்விகள் கேட்பதற்கு, மற்றொன்று வேலைகளை செய்து முடிப்பதற்கான வழிகாட்டியாக பயன்படுத்துவது, தங்களுடைய ரைட்டிங் அசிஸ்டன்ட்டாக பயன்படுத்துவது ஆகிய அணுகுமுறை தான் மக்களிடம் இருக்கிறதாம்.
Asking, Doing, and Expressing ஆகிய மூன்று கருத்தாக்கம் கொண்டு தான் அதிகமான கலந்துரையாடல் நடக்கிறது. இதன்படி 49 சதவீதம் பேர் Asking அடிப்படையில் தான் பெரும்பாலானவர்கள் சாட் ஜிபிடி பயன்படுத்துகின்றனர். அதாவது கேள்வி கேட்டு பதில் பெறும் அணுகுமுறை. ஒரு குறிப்பிட்ட வேலையை எப்படி முடிப்பது , ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இருக்கும் சந்தேகத்தை தீர்ப்பது, ஒரு விஷயத்தில் முடிவு எடுப்பது என கேள்வி சார்ந்த விஷயங்கள் தான் அதிகமாக இருக்கிறதாம்.
அடுத்ததாக 40% பேர் Doing அதாவது ஒரு வேலையை எப்படி செய்து முடிப்பது என்பதற்காக பயன்படுத்துகிறார்கள் உதாரணமாக ஒரு மின்னஞ்சலை உருவாக்குவது ,ஒரு ஆவணத்தை தயாரிப்பது ,ஒரு குறிப்பிட்ட திட்டமிடலை மேற்கொள்வது உள்ளிட்டவற்றுக்கு அதிகமாக பயன்படுத்துகிறார்கள். தங்களுக்கான வழிகாட்டியாகவும் சாட் ஜிபிடியை வைத்து கொள்கிறார்கள்.
அடுத்ததாக personal reflection, exploration, playful conversations ஆகியவற்றுக்காக 11% பேர் சாட் ஜிபிடி பயன்படுத்துகிறார்கள். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சாட் ஜிபிடி பயன்பாடு அதிகமாக உள்ளது. உலக அளவில் சாட் ஜிபிடி இரண்டாவது அதிக பயனர்களை கொண்ட நாடு இந்தியா தான்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications