அமெரிக்காவில் கலக்கும் 4 இந்திய பெண்கள்.. நாங்கெல்லாம் சுயம்பு..!

உலகின் முன்னணி பணக்காரர்களில் பெரும்பாலும் பரம்பரையாக வந்த சொத்துக்கள் உடன் தான் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர், ஆனால் ஒரு சிலர் மட்டுமே போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் சொந்த முயற்சியில் தொழில் துவங்கியோ அல்லது முக்கிய பதவிகளில் இருந்து பெரும் பணக்காரர்களாகி உள்ளனர்.

போர்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்காவின் 100 வெற்றிகரமாக இருக்கும் பெண்கள் குறிப்பாக சொந்தமாக தங்களுடைய செல்வத்தை உருவாக்கிய பெண்கள் (self-made women) பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் வெற்றி பெறுவது எவ்வளவு கடினமோ அதை விட கடினம் அமெரிக்காவில் வெற்றிப்பெறுவது.

 அமெரிக்காவில் கலக்கும் 4 இந்திய பெண்கள்.. நாங்கெல்லாம் சுயம்பு..!

அப்படி அமெரிக்காவின் டாப் 100 self-made women பட்டியலில் 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 4 பேரின் மொத்த சொத்து மதிப்பு 4.06 பில்லியன் டாலராகும். அமெரிக்காவில் இந்திய பெண்களின் இந்த வெற்றி பெரிய அளவில் பாராட்டப்படுகிறது.

போர்ப்ஸ் நிறுவனத்தின் America's 100 most successful self-made women பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது டயான் ஹென்ட்ரிக்ஸ் இவர் ஏபிசி சப்ளை நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். அமெரிக்காவில் ஏபிசி சப்ளை நிறுவனம் ரூஃபிங், சைடிங் மற்றும் ஜன்னல்களின் மிகப்பெரிய விநியோகஸ்தர்களில் ஒன்று. Diane Hendricks-ன் மொத்த சொத்து மதிப்பு 15 பில்லியன் டாலர்.

இவரை தொடர்ந்து அமெரிக்காவின் புகழ்பெற்ற பெண் இசைக் கலைஞர்களில் ஒருவரான ரிஹானா 1.4 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் உள்ளார். மேலும் இப்பட்டியலில் இந்த ஆண்டு தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஷோண்டா ரைம்ஸ் மற்றும் இன்சிட்ரோ தலைமை நிர்வாக அதிகாரி டாப்னே கொல்லர் உட்பட எட்டு பேர் புதிகாக இடம்பெற்றுள்ளனர். சரி இந்திய பெண்கள் யார்..?

கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் நிறுவனமான அரிஸ்டா நெட்வொர்க்-கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஜெயஸ்ரீ உல்லால் America's 100 most successful self-made women பட்டியலில் இருக்கும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண். ஆனால் இப்பட்டியலில் இவருடைய இடம் 15. அரிஸ்டா நெட்வொர்க்-ல் ஜெயஸ்ரீ உல்லால் சுமாக் 2.4 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.

ஐடி கன்சல்டிங் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான சின்டெல் (Syntel) நிறுவனத்தின் இணை நிறுவனரான நீரஜா சேத்தி, அமெரிக்காவின் 100 பணக்கார பெண்கள் பட்டியில்ல 25வது இடத்தைப் பிடித்துள்ளார். நீரஜா சேத்தி தனது கணவர் பாரத் தேசாய் உடன் இணைந்து 1980 இல் சின்டெல் நிறுவனத்தை நிறுவினார். நீரஜா சேத்தி-இன் நிகர மதிப்பு 990 மில்லியன் டாலர்.

நேஹா நர்கடே இவர் 2023 ஆம் ஆண்டில் Oscilar என்ற மோசடி கண்டறியும் நிறுவனத்தை நிறுவினார், இது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் சிஇஓ ஆகவும் உள்ளார். நேஹா நர்கடே இதற்கு முன்பு கிளவுட் சேவை நிறுவனமான Confluent நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) இருந்தார். இவருடைய சொத்து மதிப்பு தற்போது 520 மில்லியன் டாலர் உடன் இப்பட்டியலில் 50வது இடத்தில் உள்ளார்.

பெப்சி கோ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வாக இருக்கும் இந்திரா நூயி 2019 ஆம் ஆண்டில் சுமார் 24 வருட பணிக்கு பின்பு ஓய்வு பெற்றார். 67 வயதான இந்திரா நூயி தற்போது 350 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 77வது இடத்தில் உள்ளார்.

இந்த 4 பேரும் சுயம்புவாக தங்களுடைய கல்வி, முயற்சிகள் மூலம் வர்த்தக துறையில் சாதித்து தற்போது போர்ப்ஸ் நிறுவனத்தின் America's 100 most successful self-made women என்ற பெருமை மிக்க பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+