உலக பணக்காரர் பட்டியல் மற்றும் இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்திய தொழிலதிபர் அதானி உள்ள நிலையில் தற்போது இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
முதல் இரண்டு இடங்களை அதானி மற்றும் அம்பானி உள்ள நிலையில் அடுத்து உள்ள 8 இடங்களில் இடம்பெற்றுள்ள தொழிலதிபர் குறித்து தற்போது பார்ப்போம்.
பணக்கார இந்தியர்கள்
2022 ஆம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் 100 பேர் கொண்ட பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தொழில் வளர்ச்சி தொற்றுநோய் பிறகு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் உலக அளவில் இந்தியா ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது என்று கூறியுள்ள ஃபோர்ப்ஸ் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
5வது பொருளாதார நாடு
இங்கிலாந்து நாட்டை விட பொருளாதாரத்தில் முன்னேறிய இந்தியா விரைவில் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதலிடத்தில் கெளதம் அதானி
ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 25 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் கௌதம் அதானி பிடித்துள்ளார் என்பதும் அவரது நிகர சொத்து மதிப்பு 150 பில்லியன் டாலராக உள்ளது என்றும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இடத்தில் முகேஷ் அம்பானி
2013ஆம் ஆண்டு முதல் முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி 92.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணக்காரர் பட்டியலில் மாற்றம்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 8-வது இடத்தில் இருந்த கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோடக் இந்த ஆண்டு 12 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதேபோல் சாவித்திரி ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த ஆண்டு 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளனர் என்றும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 10 பணக்காரர் பட்டியல்
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டில் 100 பணக்கார இந்தியர்களின் பட்டியலில் முதல் 10 பணக்கார இந்தியர்கள் பட்டியல் இதோ:
1.. கௌதம் அதானி & குடும்பம்- $150 பில்லியன்
2. முகேஷ் அம்பானி - $88 பில்லியன்
3. ராதாகிஷன் தமானி & குடும்பம்-$27.6 பில்லியன்
4. சைரஸ் பூனவல்லா - $21.5 பில்லியன்
5. ஷிவ் நாடார்-$21.4 பில்லியன்
6. சாவித்ரி ஜிண்டால் & குடும்பம்-$16.4 பில்லியன்
7. திலீப் ஷங்வி & குடும்பம்-$15.5 பில்லியன்
8. ஹிந்துஜா சகோதரர்கள்-$15.2 பில்லியன்
9. குமார் பிர்லா-$15 பில்லியன்
10. பஜாஜ் குடும்பம்-$14.6 பில்லியன்


Click it and Unblock the Notifications