ரஷ்யா-உக்ரைன் போர் ஒரு வருடத்திற்கு மேல் நடந்து வருவது, பணவீக்கம் அதிகரிப்பது, மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை நிறுத்தாமல் உயர்த்துவது மற்றும் கிரிப்டோ சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் வங்கிகளின் தடுமாற்றம் என 2022 முதல் 2023 துவக்கம் வரையில் பல முக்கியமான விஷயம் உலக பணக்காரர்களை பாதித்துள்ளது.
இதன் வாயிலாக 2023 ஆம் ஆண்டுக்கான போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் உள்ள 2,640 பில்லியனர்களில் கிட்டத்தட்ட பாதி பேரின் சொத்து மதிப்பு 2022 விடவும் குறைவாக உள்ளது. இதைவிட முக்கியமாக 254 பேர் போர்ப்ஸ் பில்லியனர் 2023 பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர்.
கொரோனா ஏழை மற்றும் நடுத்தர மக்களை பதம் பார்த்தது, கொரோனாவுக்கு பின்பான வர்த்தக சூழ்நிலை பணக்காரர்களை பாதித்துள்ளது.
போர்ப்ஸ் 2023
போர்ப்ஸ் 2023 ஆம் ஆண்டு உலக பில்லியனர்கள் பட்டியலில் இந்திய பணக்காரர்கள் சாதனை படைத்துள்ளனர். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 169 பேர், கடந்த ஆண்டு 166 ஆக இருந்தது. ஆனால் இப்பட்டியலில் இருக்கும் இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 10 சதவீதம் சரிந்து 750 பில்லியன் டாலரில் இருந்து 675 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
Wayfair நிராஜ் ஷா
Wayfair நிராஜ் ஷா உட்பட பல இந்திய-அமெரிக்க தொழிலதிபர்கள் போர்ப்ஸ் பில்லியனர்ஸ் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர். Wayfair நிராஜ் ஷா சொத்து மதிப்பு தற்போது $600 மில்லியனாக உள்ளார், இது 2022 ல் $1.6 பில்லியனாக இருந்தது.
HCL நிறுவனர் ஷிவ் நாடார்
இந்திய தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மென்பொருள் நிறுவனமான HCL நிறுவனர் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு கடந்த வருடத்தை காட்டிலும் 11 சதவீதம் சரிந்து 25.6 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால் இப்போதும் இந்தியாவின் மூன்றாவது பணக்காரராக தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
Zerodha நிகில் காமத், நிதின் காமத்
பெங்களூரைச் சேர்ந்த நிகில் காமத், தனது சகோதர் நிதின் காமத்துடன் இணைந்து உருவாக்கிய இந்தியாவின் மிக பிரபலமான தள்ளுபடி தரகு நிறுவனமான Zerodha வெற்றியின் மூலம் போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் நுழைந்துள்ளார். நிகில் காமத் மதிப்பு 1.1 பில்லியன் டாலர் மற்றும் நிதின் காமத் சொத்து மதிப்பு 2.7 பில்லியன் டாலர். இருவரும் புதிதாக போர்ப்ஸ் பட்டியலுக்குள் நுழைந்துள்ளனர்.
இந்திய பட்டியல்
போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய பட்டியலில் சுமார் 23 பேர் கடந்த ஆண்டு இடம்பெற்று இந்த ஆண்டு வெளியேறியுள்ளனர். உதாரணமாக பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா ஐபிஓ வெளியிட்ட பின்பு இந்நிறுவன பங்குகள் தொடர்ந்து சரியும் காரணத்தால் போர்ப்ஸ் 2023 பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார்.
சைரஸ் பூனவல்லா
இந்தியாவின் தடுப்பூசி மன்னன் என அழைக்கப்பட்ட சைரஸ் பூனவல்லா நிகர மதிப்பு 7 சதவீதம் சரிந்துள்ளது. ஆனாலும் இந்தியாவின் நான்காவது பணக்காரராக தனது இடத்தைப் பிடித்தார். சைரஸ் பூனவல்லா சொத்து மதிப்பில் பெரும் பகுதி நிதிச் சேவை நிறுவனமான பூனவல்லா ஃபின்கார்ப் மற்றும் தனியார் நிறுவனமான செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவை அடங்கும்.
டாப் 10 பட்டியல்
இந்சிய பணக்காரர்கள் பட்டியில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ஷிவ் நாடார், சைரஸ் பூனவல்லா ஆகியோர் முதல் 4 இடத்தை பிடித்துள்ளனர்.
ஸ்டீல் அதிபரான லக்ஷ்மி மிட்டல் 5வது இடத்தைப் பிடித்தார், அதைத் தொடர்ந்து OP ஜிண்டால் குழுமத் தலைவர் சாவித்ரி ஜிண்டால், சன் பார்மாவின் திலீப் ஷாங்வி மற்றும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் DMart ராதாகிஷன் தமானி ஆகியோர் அடுத்த 4 இடங்களை பிடித்துள்ளனர்.
குமார் பிர்லா 9வது இடத்திலும், உதய் கோடக் 10வது இடத்திலும் உள்ளனர்.
உலகின் டாப் 25
ஃபோர்ப்ஸின் உலக பில்லியனர்கள் பட்டியலின்படி, உலகின் 25 பணக்காரர்களின் மொத்த மதிப்பு 2.1 டிரில்லியன் டாலர் ஆகும், இது 2022 இல் $2.3 டிரில்லியனில் இருந்து $200 பில்லியன் குறைந்துள்ளது. அதிலும் முக்கியமாக டாப் 25 பேரில் மூன்றில் இரண்டு பகுதியினரின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது.
அமேசான் - ஜெப் பெசோஸ்
கடந்த ஒரு ஆண்டில் அமேசான் பங்குகள் 38 சதவிகிதம் சரிந்ததால், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 2022 இல் உலகின் 2வது பெரிய பணக்காரராக இருந்த நிலையில் இந்த ஆண்டு 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். டாப் 10 பட்டியலில் இருப்பவர்கள் மத்தியில் அதிகப்படியான இழப்பை சந்தித்தது ஜெப் பெசோஸ் தான். ஜெப் பெசோஸ் 114 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளனர்.
எலான் மஸ்க்
இந்த ஆண்டு சொத்து மதிப்பில் அதிகம் இழப்பை சந்தித்தவர்களில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க், டிவிட்டருக்காக டெஸ்லா பங்குகளை விற்பதன் மூலம் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை இழந்தார். ஒரு வருடத்தில் சுமார் 39 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளார். தற்போது 51 வயதான எலான் மஸ்க், 180 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 2வது பெரும் பணக்காரர் என்ற இடத்தில் உள்ளார்.
பெர்னார்ட் அர்னால்ட்
லூயிஸ் உய்ட்டன், கிறிஸ்டியன் டியோர் மற்றும் டிஃபனி & கோ. போன்ற முன்னணி ஆடம்பர பிராண்டுகளுக்கு சொந்தக்காரர்களான எல்விஎம்ஹெச் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 211 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதல் முறையாக பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications