ஃபோர்ப்ஸ் 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 4 இந்தியர்கள்.. யார் யார் தெரியுமா?

உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் தற்போது பணக்காரர்கள் ஆகி வருகின்றனர் என்பதும் குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பல இந்தியர்கள் பணக்காரர்களாக உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 400 அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் 4 இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த 4 இந்தியர்கள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

4 இந்திய அமெரிக்கர்கள்

4 இந்திய அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களான ஜே சௌத்ரி, வினோத் கோஸ்லா, ரொமேஷ் வாத்வானி மற்றும் ராகேஷ் கங்வால் ஆகியோர் ஃபோர்ப்ஸ் 2022 ஆம் ஆண்டின் 400 பணக்கார அமெரிக்கர்களின் பட்டியலில் உள்ளனர்.

ஜே சௌத்ரி

ஜே சௌத்ரி

கடந்த 1996 ஆம் ஆண்டில், சௌத்ரி மற்றும் அவரது மனைவி தங்கள் வேலையை விட்டுவிட்டு, SecureIT என்ற நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்து இன்று அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. தற்போது நெவாடாவின் ரெனோவில் வசிக்கும் செளத்ரிக்கு $8.3 பில்லியன் சொத்து மதிப்பு உள்ளது.

வினோத் கோஸ்லா

வினோத் கோஸ்லா

அமெரிக்க இந்தியரான வினோத் கோஸ்லா 1982 ஆம் ஆண்டில் ஆண்டில் பெக்டோல்ஷெய்ம், பில் ஜாய், ஸ்காட் மெக்னீலி ஆகிய மூவருடன் இணைந்து சன் மைக்ரோசிஸ்டம்ஸ் என்ற கணினி வன்பொருள் நிறுவனத்தை நிறுவினார். 67 வயதான வினோத் கோஸ்லா 5.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 181வது இடத்தில் உள்ளார்.

ரோமேஷ் டி. வாத்வானி

ரோமேஷ் டி. வாத்வானி

அமெரிக்காவில் வாழும் இந்தியரான ரோமேஷ், ஹெல்த்கேர் மற்றும் லைஃப் சயின்ஸில் கவனம் செலுத்தும் AI நிறுவனமான ConcertAI என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 5.1 பில்லியன் டாலர் என்பதும் இவர் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 196வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ராகேஷ் கங்வால்

ராகேஷ் கங்வால்

கடந்த1984ஆம் ஆண்டில் யுனைடெட் ஏர்லைன்ஸில் தனது விமானப் பணியைத் தொடங்கிய ராகேஷ் கங்வால், அதன் தலைமை நிர்வாகி மற்றும் தலைவராக மாறினார். ஃபோர்ப்ஸ் பட்டியலில் 261 வது இடத்தில் உள்ள இவரது சொத்து மதிப்பு $4.1 பில்லியன் ஆகும்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் முதலிடத்தில் உள்ளார் என்பதும், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+