டெல்லி: தான் எதை கையில் எடுத்தாலும் அதை வெற்றி காணும் திறன் கொண்ட, உலக பில்லியனர்களில் ஒருவர் தான் முகேஷ் அம்பானி. தற்போது கூகுளின் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரையும் விட முகேஷ் அம்பானி முன்னணியில் உள்ளாராம்.
அப்படி என்ன விஷயம்? எதில் முன்னணி என்று கேட்கிறீர்களா? அதை பற்றித் தான் பார்க்கப் போகிறோம் வாருங்கள்.

கடந்த வியாழக்கிழமையன்று முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு (market capitalisation) 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 60.5 பில்லியன் டாலராகும். இதே கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் மதிப்பு சுமார் 59.6 பில்லியன் டாலரும், 57.5 பில்லியன் டாலரும் உள்ளது.
இந்த வகையில் அம்பானி உலகின் 9-வது பணக்காரர் ஆகவும், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் முறையே 10-வது மற்றும் 11-வது இடத்தில் உள்ளனர்.
இந்த பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து முறையாக பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பத்தினர், பில்கேட்ஸ், வாரன் பஃப்பெட், மார்க் ஜூக்கர்பெர்க், லாரி எலிசன், அமான்சியோ ஒர்டேகா, கார்லோஸ் ஸ்லிம் ஹெலு மற்றும் குடும்பத்தினர், முகேஷ் அம்பானி மற்றும் லாரி பேஜ் ஆகியோர் உள்ளனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் 2019 பணக்கார பட்டியலில், முகேஷ் அம்பானி 50 பில்லியன் டாலர் மதிப்புடன் நான்காவது முறையாக 13-வது இடத்தை பிடித்திருந்தார்.
ஜெஃப் பெசோஸ், மார்க் ஜூக்கர்பெர்க், ஜாக் மா ஆகியோருக்கு பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி நான்காவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் பங்கு சந்தையின் தந்தை எனக் கூறப்படும் வாரன் பஃபெட்டை விட முன்னணியில் இருப்பது குறிபிடத்தக்கது.
வியாழக்கிழமையன்று முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10,01,270 கோடி ரூபாயாகும். இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 1581 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த புதன் கிழமையன்று முடிவில் 1569.75 ரூபாயாக பிஎஸ்இ-யில் இருந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications