உலகின் முன்னணி வர்த்தகப் பத்திரிக்கையாக விளங்கும் போர்ப்ஸ் 36 வது முறையாக உலகப் பணக்காரர்கள் பட்டியை வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டுப் பில்லியனர்கள் பட்டியலில் எப்போதும் இல்லாமல் பில்லியனர்கள் எண்ணிக்கையில் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு 87 பேர் குறைந்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் 1000 பில்லியனர்களின் சொத்து மதிப்பு மட்டுமே உயர்ந்துள்ளது, பிற பில்லியனர்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
இதேவேளையில் இந்திய பில்லியனர்கள் பலரின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
2022 பட்டியல்
போர்ப்ஸ் நிறுவனத்தின் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சுமார் 2668 பேர் இடம்பெற்றுள்ளனர். மேலும் 236 பேர் புதிதாக இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர், இதனுடன் பார்படாஸ், பல்கேரியா, எஸ்டோனியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் இருந்து புதிதாகப் பில்லியனர்கள் இடம்பெற்றுள்ளனர்.
முதல் இடம்
போர்ப்ஸ் நிறுவனத்தின் உலகப் பணக்காரர்கள் பட்டியல் 2022ல் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் 219 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 2020ல் இருந்து இவரது சொத்து மதிப்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
டாப் 10
இப்பட்டியலில் அமேசான் ஜெப் பைசோஸ், லூயிவிட்டான் பெர்நார்டு அர்னால்ட், மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ், வாரன் பபெட், கூகுள் லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின், ஆரக்கிள் லேரி எலிசன், மைக்ரோசாப்ட் ஸ்டீவ் பால்மர் ஆகியோர் 171 பில்லியன் டாலர் முதல் 91.4 பில்லியன் டாலர் உடன் 2 முதல் 9வது இடத்தில் இடம்பெற்றுள்ளனர்.
முகேஷ் அம்பானி
டாப் 10 பட்டியலில் 10வது இடத்தில் இந்தியரான முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 90.7 பில்லியன் டாலராக உயர்ந்து 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய பில்லியனர்கள்
முகேஷ் அம்பானியை தொடர்ந்து 11வது இடத்தில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 90 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். இவரைத் தொடர்ந்து ஷிவ் நாடார், சைரஸ் பூனாவாலா, ராதாகிஷன் தமனி, லட்சுமி மிட்டல், சாவித்ரி ஜின்டால், குமார் மங்களம் பிர்லா, உதய் கோட்டாக், சுனில் மிட்டல், அசிம் பிரேம்ஜி, குஷால் பால் சிங், பஜாஜ் பிரதர்ஸ் மற்றும் முரளி திவி உடன் சுமார் 166 பேர் இடம்பெற்றுள்ளனர்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications